விசுவாசமானது ஆறாவது புலனாகும் Chatauqua, Ohio, USA 60-0611E 1ஆதிமுதல் நம்மிலே வைக்கப்பட்டுள்ள நம்முடைய ஐம்புலன்களிலிருந்து அது நம்மை வெளியே கொண்டு வருகின்றது. இருக்கும் ஐந்து புலன்களிலே அந்த ஐந்தாவது புலனில், தன்னுடைய இச்சையினால் புலன்களுடன் சேர்ந்து மனிதன் அங்கு விழுந்து போனான். இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல் ஆகிய இவைகளின் மூலம் உங்கள் உலக கூடாரத்தை தொடர்பு கொள்ள மாத்திரமே இவைகள் உங்களுக்கு அளிக்கப்பட்டன. ஆனால் அவைகள் உங்களை வழிநடத்த அளிக்கப்படவேயில்லை. பல சமயங்களில்... நான் இனிமேலும் காண விரும்பவில்லையெனில், நான் என் கண்களை கட்டிக் கொண்டு, “மறைத்துக் கொண்டு எனக்கு பார்க்க விருப்பமில்லை'' எனக் கூறலாம். அது சரியே. என் கண்கள் எனக்கு இனி சேவை செய்ய முடியாது. நல்லது. பிறகு, நான் - முடிவில் குருடாகிப் போவேன். பிறகு என் மகன் வரும்போது. ”அவன் கண்களைக் கட்டி பார்வை என்ற ஒரு காரியமே இல்லை'' எனக் கூறி அவன் காணக்கூடாதபடிக்கு செய்து, அவன் “என் தந்தை பார்வை என்ற ஒரு காரியமே இல்லை என்று கூறியுள்ளார். ஆதலால் என் மகன்களுடைய கண்களையும் கட்டுவேன்'' என்று கூறுவானானால், நல்லது முதலாவது காரியம் என்ன தெரியுமா? நம்முடைய சந்ததி குருடாக பிறக்கும். அது சரி. உன்னுடைய ஆறு புலன்களையும் நீ உபயோகப்படுத்தப்படவில்லை என்றால், அவை செயலற்றுப் போய்விடும். அவை செயல்படாது. 2சகோதரனே, தேவன் அவனுக்குள் வைத்த ஆறாவது புலனுக்கு சபையானது அதைத்தான் செய்துள்ளது. அவன் அற்புதங்களிலும் அடையாளங்களிலும் விசுவாசத்தை வைத்திருக்கிறான். தேவனிடம் தொடர்பு கொள்கையில் அவனுக்கு பரிசுத்த ஆவி அளிக்கப்பட்டது. பிறகு அவன் தன்னைத்தானே அங்கேயும், இங்கேயும் அல்லது வேறெங்காகிலும் வைப்பானாகில், அவன் மரிக்கும் நிலைக்கு வந்துவிடுகிறான். அது சரி. அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று அவனுக்கு தெரியவில்லை. அது அவனுக்கு ஒன்றுமில்லாத காரியமாகிறது. நீ கூறலாம் நல்லது, “தேவன் சுகமளிப்பவர்” என்று. ''ஓ, அதைக் குறித்து என்ன, தேவன் சுகமளிப்பவர்'' அவர் சுகமளிப்பவராக இருந்ததுண்டானால், இன்னுமாய் அவர் சுகமளிப்பவர்தான். அவர் இரட்சகராய் இருந்ததுண்டானால், இன்னுமாய் அவர் இரட்சகர்தான். அவர் தேவனாய் இருந்தாரானால் இன்னுமாய் அவர் தேவன்தான். ஆகவே பாருங்கள், விசுவாசத்தைப் பற்றி மக்களுக்கு பிரசங்கிக்கப்படாததால், அவர்கள் ஆறாவது புலனாகிய விசுவாசத்தை விட்டுவிடச் செய்கிறது. அது செயலற்றுக் கிடக்கின்றது. 3ஆகவே வருடங்கள் முழுவதும் அவர்கள் வியாதியுற்று மருத்துவரிடம் ஓடி, மருத்துவரே, ஓ, “எனக்குள் ஏதோ தவறு நேர்ந்துள்ளது'', என்று கூறுவர். மருத்துவர் அதைப் பார்த்து... ''நான் முயற்சி செய்கிறேன்'' என்பார். அம்மனிதன், ஒரு உத்தமமான மருத்துவர் உனக்கு உதவி செய்ய, தேவன் அவருக்கு (மருத்துவருக்கு - தமிழாக்கியோன்) அளித்த சக்தியின் மூலம் பொறுமையாக உன்னை சோதித்துப் பார்த்து உனக்கு உதவ முயல்கையில், முதலாவதாக காரியம் என்ன ஆகிறது தெரியுமா? அது (வியாதி - தமிழாக்கியோன்) முதிர்கிறது. அவர் கூறுவார், ''என்னால் இதைத்தான் உனக்கு கூற முடியும். என்னால் எதுவும் செய்ய முடியாது. வேண்டுமானால் நீ வேறொரு மருத்துவரை போய் பார்க்கலாம்“. நல்லது. நீ வேறொரு மருத்துவரிடம் சென்றால், அவர் “எதுவுமே செய்ய முடியாது. அது மிகவுமாக முதிர்ந்துவிட்டது'' என்று கூறுவார். இப்பொழுது அதுதான் அந்த நேரம். ஆறாவது புலனை அழைக்க வேண்டிய நேரம் அதுதான். தேவனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நேரம் அது தான். தேவன் உனக்குள் வைத்துள்ள விசுவாசத்தின் ஆவியின் மேல் சார்ந்து கொள்ள வேண்டிய நேரம் அதுதான். 4இப்பொழுது, நீண்ட காலமாக அதற்கெதிராக ஜனங்களுக்கு போதிக்கப்பட்டு வருவதால், அது கடினமான காரியமாகிறது. சகோதரன் போஸ் இன்று என்னிடம் “சகோ. பிரான்ஹாமே, நீர் எதற்கெதிராக பேசினீர் என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை'' என்று கூறினார். பாருங்கள்? தேவனுடைய வல்லமையானது மக்களிடையே இறங்கி வந்து, அசைவாடி காரியங்கள் நடப்பிக்கப்படுவதை மக்கள் கண்டு, சிலர் அங்கு உட்கார்ந்து ”ஓ, நீர் இதை, அதை, அல்லது மற்றதை மாத்திரம் செய்வீரானால் அது எனக்கு உதவியாயிருக்கும்'' என்று கூறுவார்கள். இதை நீ அறியாதிருந்தால், என்ன ஒரு கடினமாக காரியமாக இருக்கும். ஓ, சகோதரனே, இந்த வாரம் முழுவதும் நாம் என்ன பிரசங்கித்துக் கொண்டு வந்தோம் என்பதை அந்த ஆறாவது புலன் அறிந்து கொள்ளுமானால் (ஆமென்), அதுதான் பரிசுத்த ஆவி. தேவன் இதை வாக்களித்துள்ளார். கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்துள்ளார். நாம் அதை இந்த வாரம் முழுவதும், இன்றைய நாளிலே அவர் செய்து கொண்டிருக்கும் இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை செய்ய தேவன் வாக்குரைத்திருந்தார் என்பதை நாம் அறியும் வரை மேலும் கீழும், முழுவதுமாக ஆராய்ந்தோம். இப்பொழுது, உண்மையான பழுதற்ற விசுவாசமானது அதைக் கண்டு அதைப் பிடித்துக் கொள்ளும். பாதாளத்திலிருந்து வருகின்ற எல்லா பிசாசுகளாலும் அவனை அதினின்று அசைத்து இழுக்கவே முடியாது. ஆனால் அதைக் குறித்து தடுமாறுகிறோம். அது சரியாக பிரயோகிக்கப்படவில்லை. நாம் ஐம்புலன்களின் மேலேயே நம்பிக்கை வைக்கிறோம். நிறைய சமயங்களில், 95 அல்லது அதற்கு மேற்பட்ட சதவிகித மக்கள் ஐந்து புலன்களிலே எல்லாம் முடிகின்றது என்று காண்கிறார்கள், “நல்லது, எல்லாம் போய்விட்டது, என் கல்லறையைத் தோண்டி; என் சவப்பெட்டியைத் தயாராக்குங்கள்'' என்பார்கள். பாருங்கள்? 5ஓ, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக இங்கு நான் நேர்காணல் கண்ட ஒரு பெண்ணை நினைவு கூறுகிறேன். இப்பொழுது அவர்களை இங்கு நான் பார்க்கவில்லை. அந்த மனிதனின் பெயர் (ஒருவித ஜெர்மன் பெயர்) டார்ச் (Dorch) டாஷ் (Dash) அல்லது டெளகிஷ் (Doish). அவருடைய மனைவி ஒரு சொப்பனத்தைக் கண்டு என்னிடம் வந்து கூறினாள். அவள் கூறினாள் “சகோ. பிரான்ஹாமே, ஒரு பிசாசு என் கட்டிலின் பக்கம் வந்து என்னைப் பார்த்து தன் கோணலான முகத்தைக் காட்டி ”உன்னை இப்பொழுது பிடித்து விட்டேன்“ என்றான். அப்பொழுது ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது, 'நான் கட்டிலிலிருந்து குதித்தெழுந்து இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே பிசாசே இங்கிருந்து வெளியே போ' என்று கூறி அவனை துரத்தினேன். 'அவன் வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டான்' என்றாள். பிறகு அவள், ”அது என்ன என்று எனக்குப் புரியவில்லை'' என்று கூறினாள். பிறகு அங்கு பிரசன்னமாயிருந்த பரிசுத்த ஆவியானவர் அதற்கு விளக்கமளித்தார். அதற்கு பிறகு சிறிது கழித்து அவளுடைய கணவருக்கு இருதய கோளாறு ஏற்பட்டது. அந்த வயதான, கனத்த மனிதன் விழுந்து, அவருடைய கைகள் பின்னால் திரும்பி, கண்கள் நிலைத்து நின்றது. அவள் அதைப் பார்த்தாள். மரணம் அம்மனிதனை எடுக்க வந்தது. தேவன் அம்மனிதனோடு இருக்கவில்லை. அந்த சிறிய ஸ்திரீயின் விசுவாசம் மேலே எழுந்து ''அதை நான் விடமாட்டேன்! இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அவருடைய ஜீவனை அழைக்கிறேன்'' என்று கூறினாள். அவர் சுகமடைந்தார். பாருங்கள்? என்ன? அந்த நேரத்தின் முக்கிய கட்டத்திலே ஆறாம் புலனானது எழும்பி அவளுக்கு விசுவாசத்தை அளித்தது. தேவன் அவளுக்கு சொப்பனத்தை அருளியிருந்தார். விளக்கமோ அவளுக்கு அளிக்கப்படவில்லை. ஆனால் நான் கூறினேன் ''இதோ உன்னுடைய விளக்கம்'' என்று. அப்பொழுது அம்மனிதன் கூச்சலிட்டு தேவனைத் துதித்தான். அவள் சரியாக அப்படிதான் நடந்தது என்று கூறினாள். பாருங்கள்? அது... இப்பொழுது, அது கிருபைக்குள் செல்கின்றது. பாருங்கள்? அது என்ன என்பதை அறியாத ஒரு சொப்பனத்தை அவளுக்கு அளித்தார். ஆனால், தம்முடைய மக்கள் இருக்க வேண்டிய இடத்திலேயே அவர்கள் இருக்க அவர்களுக்கு உண்மையுள்ளவராகவும் நன்றியுள்ளவராகவும் தேவன் இருக்கிறார். 6இப்பொழுது நாம் தாமே ஆவிக்குரியவர்களாய் மாத்திரம் இருந்து அந்த ஆறாம் புலனை உபயோகிப்போமானால், நாம்... ஓ, எத்தனை காரியங்களை நாம் கடந்து செல்வோம். சபையானது சரியான ஒழுங்கில் நடக்குமானால் எத்தனையோ காரியங்களை நாம் அறிந்து கொள்ளலாம். சபைக்கான வரங்களும், ஆவிகளும் கிரியை செய்யும். அனனியாவும், சப்பிராளும் எல்லா இடங்களிலும் விழுந்து கிடப்பதை நாம் பார்க்கலாம். அது சரி. பாவமென்பது சபையை விட்டு வெளியே இருக்கும். ஆனால் நம்முடைய புலன்களை கொண்டு பூமிக்குரியவர்களாய் ஆகிப்போனோம். அப்படித்தான், “நல்லது, என்னால் அதைக் காண முடியவில்லை. என்னால்...'' பிசாசு அந்தப் புலன்களுக்குள் புகுந்து கொள்கிறான். உங்கள் கண்களால் ஏதோ ஒன்றைக் காணச் செய்து, பின்னும் அதை அவிசுவாசிக்கச் செய்வான். ஏனென்றால் நீங்கள் குருடாய் இருக்கும் வரையில், அநேக சமயங்களில் உங்கள் கண்களை மூடியே வைத்திருந்தீர்கள். 7ஒரு சமயம், ஒருவன் என்னிடம் வந்து என்னை குருடாக்கு பார்க்கலாம். நீர் தெய்வீக சுகமளித்தலை, பவுல் பிரசங்கித்த அதே பரிசுத்த ஆவியை நம்புகிறீர், “என்னை குருடாக்கு'' என்றான். நான் கூறினேன், ''என்னால் அதைச் செய்ய இயலாது. ஏனென்றால் ஏற்கனவே நீ குருடாய் இருக்கிறாய்''. நான் மேலும், “உன் பிதாவாகிய பிசாசு நீண்ட காலத்துக்கு முன்பே அதை உனக்குச் செய்துவிட்டான். பாருங்கள். நீ.. நீ.. நீ.. நீ... ஏற்கனவே குருடாய் இருக்கிறாய்'' என்றேன். அவன் குருடன் என்று வேதம் கூறுகின்றது. இந்த சுவிசேஷமானது யாருக்கு மறைக்கப்பட்டிருக்கிறதோ அவன் குருடனாயிருக்கிறான் என்று வேதம் கூறுகின்றது. ஆகவே தேவன் தங்களுக்கு அளித்த புலன்களை உபயோகப்படுத்தாதவர்கள் தான் குருடர் ஆவர். அந்த புலனானது (விசுவாசம் - தமிழாக்கியோன்) உபயோகப்படுத்தப்பட்டால் மற்ற ஐம்புலன்களும் தோல்வியுற்றாலும் அது இரட்சிப்பின் புலனாகும். இந்த புலனால் மகத்தான காரியங்கள் நடப்பிக்கப்பட்டிருக்கின்றன. இங்கே சில நாட்களுக்கு முன்பு என்னுடைய கூட்டங்களில் பிரசங்க மேடையின் மேல் ஒரு ஸ்திரி வந்தாள். அவளுக்கு சீழ்ப்புண் வயிறு (Ulcered Stomach) இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. பரிசுத்த ஆவியானவர் பேசத் துவங்கினார். என்னால் அவ்வாறே செய்ய முடியாது என்பதை அவள் அறிந்திருந்தாள் அவள் யாரென்பதும் எங்கிருந்து வருகிறவள் என்பதையும் கூறினார். அவளுக்கு சீழ்புண் வயிறாய் இருந்தது. பிறகு கடந்து செல்கையில் அது “கர்த்தர் உரைக்கிறதாவது, நீ சுகமாக்கப்பட்டாய்'' என்றது. அவள் வீட்டிற்கு சென்றாள். 8அங்கு ஒரு ஸ்திரீ இருந்தாள் (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி) பக்கத்து இடத்தைச் சேர்ந்தவள். சரியாக ஜெபவரிசையில் நின்றாள். அங்கு வந்தபோது... அவளுக்கு தொண்டையில் சதை வளர்ச்சி இருந்தது. அப்பொழுது ஜெப வரிசையில் அவள் வரும்போது, அவள் யாரென்பதும், அவள் எங்கிருந்து வருபவள் என்பதையும் மற்ற எல்லாவற்றையும் அது (பரிசுத்த ஆவி - தமிழாக்கியோன்) கூறினது? அவள் ''அது சரியே'' என்றாள். “கர்த்தர் உரைக்கிறதாவது, நீ சுகமடைந்தாய்'' என்று கூறினது. ஆகவே இரு ஸ்திரீகளும் அன்றிரவே ஒன்றாகப் பெற்றுக் கொண்டு சென்றார்கள். அவர்கள் எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை. அதனிடம் (விசுவாசத்தினிடம் - தமிழாக்கியோன்) இவைகளால் (ஐம்புலன்களால் - தமிழாக்கியோன்) கிரியை செய்ய எதுவுமே இல்லை. நீ அப்புலன்களிலிருந்து தூரமாகச் செல்ல வேண்டும். நீ அதன் (ஐம்புலன்கள் - தமிழாக்கியோன்) மேல் சார்ந்திருக்கப் போகிறாய் என்றால் இதன் மேல் உன்னால் சார்ந்திருக்க முடியாது. ஏனென்றால் நீ பார்த்தல், ருசித்தல், உணர்தல், முகர்தல், கேட்டல் ஆகியவைகளால் உணரமுடியாத ஒரு சாட்சியாய் அது உள்ளது. அது வேறொரு புலன். 9என்ன நடந்தது என்பதை கவனியுங்கள். சுமார் இரண்டு வாரங்கள் கழித்து சீழ்ப்புண் வயிரை உடைய இப்பெண், சாப்பிட முயற்சித்தாள். அவள் மரிக்க விரும்பினாள். ஆனாலும் அவள் நிலைத்திருந்தாள் (விசுவாசத்தில் - தமிழாக்கியோன்) அவள் “இதைக் குறித்து இயற்கைக்கு மேம்பட்ட காரியம் ஏதோ இருக்கிறது? ஏனென்றால் அந்த மனிதன் தன் ஜீவியத்திலே என்னைக் கண்டதே இல்லை. ஆனாலும் நான் யாரென்பதைக் கூறினார். அது தேவ காரியமாய் இருக்க வேண்டும். ஏனெனில் அது வேதத்துடன் பொருந்துகிறது'' என்று கூறினாள். பாருங்கள்? இன்னுமாய் அவள் அம்மனிதனை நான் அறிவேன். அவர் பிரசங்கித்துக் கேட்டிருக்கிறேன், அவர் படிப்பறிவில்லாதவர். இக்காரியங்களைக் குறித்து அவருக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் இதைக் குறித்த எல்லாவற்றையுமே கூறிவிட்டார். அந்த மனிதன் ”கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று கூறினார். அவர் தேவனுடைய ஊழியக்காரனாய் இருந்தால் - அவர் நினைத்த ஒன்றைக் கூறியிருக்கமாட்டார். நீ சுகமாக்கப்பட்டாய் என அவர் மூலமாய் பரிசுத்த ஆவியானவர் தான் பேசினார்'' என்று கூறினாள். அவள் இன்னுமாய் நிலைத்திருந்தாள். அவளுடைய கணவன் ஒரு கிறிஸ்தவன். அவளுடைய பிள்ளைகள். ஆகவே, தொண்டையில் சதை வளர்ச்சியை உடைய அந்த ஸ்திரீயை, தன் சிநேகிதியை சந்திக்க அவள் அடுத்த தெருவிற்குச் சென்றாள். அவளுக்கும் எவ்வித மாறுதலும் இல்லாதிருந்தது. ஆனால் இருவரும் தங்களுடைய இருதயத்தில் அது தேவன்தான் என்ற நோக்கத்தை உடையவர்களாய் இருந்தனர். எல்லாமே அதுவாகத்தான் இருந்தது. 10ஒரு நாள் காலை பிள்ளைகள் பள்ளிக் கூடத்திற்குச் சென்றுவிட்டிருந்தனர். அவள் நின்றுக் கொண்டு பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். அவளால் எதுவுமே உண்ண முடியாதிருந்தது. ஏனெனில் அந்த சீழ்ப்புண் வயிறு வியாதியானது (Ulcer) அவளை எரித்து விட் டிருக்கும். அவள் பாத்திரங்களை கழுவிக்கொண்டு இருக்கையில் திடீரென்று குளுமையாக, “சில்லென்ற ஒரு உணர்வு வந்தது'' என்று கூறினாள். மேலும் ''இது என்னவாயிருக்கும்? சில்லென்ற, குளுமையாக நல்லுணர்வு உண்டாயிற்றே” என்று எண்ணினவளாய் தொடர்ந்து பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் உண்மையாகவே அவளுக்கு பசி எடுத்தது. ஆகவே அவள் மேஜை அருகே சென்று பிள்ளைகள் சிறிது உணவை பாத்திரத்தில் விட்டுவிட்டிருந்தனர். ஆகவே கரண்டியில் அந்த உணவை எடுத்து சிறிது சுவைத்து “நல்லது, இன்னும் சில நிமிடங்களில் எப்போதும் போல வாந்தி எடுத்துவிடுவேன்'' என்று எண்ணி, எப்போதும் போல இருந்துவிட்டாள். முதலாவதாக காரியம் என்னவென்று உனக்குத் தெரியுமா? எல்லாம் சரியாகிவிட்டது. அவள் முற்றிலும் சுகமாகிவிட்டாள். ஆகவே அவள் மறுபடியும் சென்று அதை சுவைத்தாள். எல்லாம் சரியாகிவிட்டிருந்தது. உண்மையாகவே அவளுக்கு ஒரு உணவு யூபிலிக் கொண்டாட்டம் போல ஆகிவிட்டது. அவள் அங்குச் சென்று இரண்டு முட்டைகளை அவித்து, ஒரு பெரிய பீங்கான் தட்டில் வைத்து, ஒரு கப் காபி தயாரித்து அவள் உண்மையாகவே சாப்பிட ஆரம்பித்தாள். சிறிது நேரமாக பாத்திரங்களைக் கழுவிக் கொண்டே இருந்தாள். பிறகு அவள் காலூன்றி நின்று, சுகமாக இருப்பதை உணர்ந்தாள். அவள் கைகளை உயர்த்தி தேவனைத் துதிக்க ஆரம்பித்தாள். என்ன நேர்ந்தது என்பதை தன் சகோதரிக்கு தெரியப்படுத்த வீதியில் ஓடினாள். அவள் அங்கு சென்றடைந்தபோது தரையில் நடந்து அந்த துணியை வேகமாக உதறிக் கொண்டிருந்த அந்த சிறிய ஸ்திரீ இவளைப் பார்த்து “நல்லது, சகோதரியே என்ன ஆயிற்று?'', ''இதோ பார், அது என் கழுத்தை விட்டு அகன்றுவிட்டது. அதை என்னால் எங்குமே காணமுடியவில்லை“ என்று கூறினாள். அது போய்விட்டிருந்தது. அது என்ன? “ஏனெனில் அவர்கள் முடியாது இல்லை'' என்ற பதிலுக்கு காத்திராமல் தேவனுடைய வார்த்தையின் ஆறாவது புலனின் மேல் அவர்கள் இருவரும் சார்ந்திருந்தனர். அதற்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் கூட்டங்களுக்கு வந்து தாங்கள் எப்படி சுகமாயினர் என்பதை எனக்கு காண்பித்தனர். அதுஎன்ன? அந்த ஆறாவது புலன், அவர்களை இரட்சித்து மீட்டெடுத்த வல்லமையின் புலன், நான் ஜெபித்ததினால் அல்ல, அவர்கள் விசுவாசித்ததினால் தான். அதுதான். அதுதான் செய்தது. 11இப்பொழுது, இந்தியானா போலிஸ் (Indiana Polis) இடத்தில் உள்ள கேடில் கூடாரத்தில் (Cadile Tabernacle) இளம்பிள்ளைவாதத்தால் (Polio) அவதியுற்ற ஒரு சிறுவன் இருந்தான். மன வியாதியில் பீடிக்கப்பட்டு நிலக்கரி கிடங்கில் உட்கார்ந்துக் கொண்டிருந்து - சகோ. ரெடிகாரின் மகள் சுகமாக்கப்பட்ட பிறகு, இச்சிறுவன் கொண்டு வரப்பட்டான். போர்ட் வேயின் சுவிசேஷ கூடாரத்தின் போதகராகிய பி. ரெடிகாரை இங்கு எத்தனைப் பேர் நினைவு கூறுகிறீர்கள்? ஓ, சுகமாக்கப்படுதலை விசுவாசித்த அந்த மனிதரைப் பற்றி பேசுவோம்... சகோ. போஸ்வர்த்தின் (Bro. Bosworth) நாட்களில் அவரை நினைவு கூறுகிறீர்களா? டாக்டர். சுலிவன், ஒரு அருமையான மனிதன்... அவருடைய மகள் அங்கு மனநிலைமைகுன்றி, அங்கு வெளியே உட்கார்ந்துக் கொண்டிருந்தாள். அதே வியாதி அவளுடைய சகோதரியை கொன்றுவிட்டிருந்தது. அவள் ஒரு அழகான பெண்மணி. அது ஒரு ஈஸ்டர் (Easter) காலையாய் இருந்தது. அவளுடைய தாயும் அங்கு உட்கார்ந்திருந்தாள். ஜெப வரிசையை நான் முடித்த பிறகு யாரோ ஒருவர் என்னிடம் வந்து ''அங்கு சபைக்கு அருகில் நிலக்கரி கிடங்கில் ஒரு ஸ்திரீ தன்னுடைய மகளுடன் அமர்ந்திருக்கிறாள். அவள் போர்ட் வேய்ன் சுவிசேஷ கூடாரத்திலிருந்து வருகின்ற “திருமதி. பி. ஈ. ரெடிகார்'' என்று கூறினார். ''என்ன, பி. ஈ. ரெடிகாருடைய மனைவியும், மகளும் என்னுடைய நிலக்கரி கிடங்கில் உட்கார்ந்துள்ளனரா?'' என்று நான் நினைத்தேன். நான் அங்கு சென்றேன். ஞாயிறு வகுப்பு பள்ளியிலிருந்து வெளியே எறியப்பட்ட பழைய நாற்காலிகளில் அவர்கள் காகிதங்கள் வைத்துக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டிருந்தனர். சுமார் பதினெட்டு, இருபது வயது நிரம்பிய அழகான இளம் பெண் தன் தலைமயிரை இழுத்துக் கொண்டு ''நிக்கல்“ (அமெரிக்க சிறு நாணயம்) (Nickel) நிக்கல் தான்காசு, காசுதான் நிக்கல், நிக்கல் தான் காசு - காசு செய்யப்பட்டது, காசு மிச்சமானது. ஒரு நிக்கல் தொலைந்து போனது, ”ஒரு நிக்கல் தொலைந்தது'' என்று கூறிக் கொண்டு மயிரைபிடுங்கிக் கொண்டு இருந்தாள். 12நான் கூறினேன், ''திருமதி. ரெடிகர்...“ ''நீங்கள் திருமதி ரெடிகர் தானே?'' ''நான் தான்“ என்று அவள் கூறினாள். ''நான் சகோ. பிரான்ஹாம்'' என்று கூறினேன். “நல்லது, உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் சகோதரன் பிரான்ஹாம்'' என்று அவள் கூறினாள். நான் “நான் சிறு பையனாக இருந்தபோது உங்கள் கணவர் என் இருதயத்தில் ஒரு சொரூபத்தை போல இருந்தவர். என்ன மகத்தான மனிதன்'' என்று கூறினேன். அவள் அழ ஆரம்பித்தாள். நான் ”இவள் அவருடைய மகளா?'' என்று கேட்டேன். அவள், “ஆம் சகோதரன் பிரான்ஹாம். எல்லா இடத்திற்கும் அவளைக் கூட்டிச் சென்றுவிட்டோம். ஒன்றும் செய்ய முடியவில்லை. அவளுடைய சகோதரி ரோமெய்ன் (Romaine) இறந்து போனாள்'' என்று கூறினாள். நான் ''இதன் காரணமாகத்தான் ரொமெய்ன் மரித்தாளா?'' என்று கேட்டேன். உங்களுடைய புகைப்படங்கள், சகோ. ரெடிகார் எழுதின ஜீவ தண்ணீர்கள் என்னும் புத்தகம் மற்றும் எல்லாமும் என் வீட்டில் உள்ளன. நான் சிறுவனாய் இருந்தபோது அவருடைய பேச்சை நான் வானொலியில் (ரேடியோ) கேட்பதுண்டு, அவர் ஒரு மகத்தான மனிதனாவார். இவள் அவருடைய குமாரத்தியா? என்று நான் வினவினேன். “அவளுடைய குமாரத்தி தான்'' என்று கூறினாள். 13அவளுடைய தந்தை மரித்து அடக்கம் பண்ணப்பட்டிருந்தார். ஏதோ ஒன்று என் மீது வந்தது. நான் நடந்து... ஆறாவது புலன் அசைய ஆரம்பித்தது. நான், “சாத்தானே, இன்னுமாய் நீ அவளை பிடித்துக் கொண்டிருக்க முடியாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளை விட்டு வெளியே வா'' என்று கூறினேன். ஆகவே அந்தத் தாய் கூறினாள். ''நான் என்ன செய்ய வேண்டும்?'' நான் கூறினேன், அவள் சுகமடைந்துவிட்டாள்; அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்'' என்று. அவள் இன்னுமாய் அங்கு உட்கார்ந்து கொண்டு நிக்கல் நிக்கல் தான், “ஒரு காசு செய்யப்பட்டது, ஒரு காசு தொலைந்தது'' என்று கூறிக் கொண்டிருந்தாள். அவர்கள் அவளை வீட்டிற்கு கொண்டு சென்றார்கள். அடுத்த நாளே அவள் சுய நினைவிற்கு திரும்பினாள். இப்பொழுது விவாகமாகி அவளுக்கு குழந்தைகள் இருக்கின்றன. என்ன அது? அந்த ஆறாவது புலனை பிடித்துக் கொண்டிருத்தல். 14சில காலத்திற்கு முன்பு (ஆறாவது புலன் என்ன செய்யும் என்கின்ற இச்சாட்சியின் உறுதி உங்களுக்கு தேவையாயிருக்குமானால்) நாங்கள் அங்கே நான் சகோதரர் ஜி. ஹெச். பிரெளன் அவர்களுடன், 505, விக்டர் தெரு, ஆர்கன்ஸாவிலுள்ள லிட்டில் ராக் என்னுமிடத்தில் என் வாழ்நாளிலே நான் கண்டிராத மோசமான ஒரு காரியம் அங்கிருந்தது. சகோதரன் பிரெளன் (ஜெப வரிசையில் நான் நீண்ட நேரம் இருந்ததால் சிறிது இடைவெளிக்குச் சென்று வந்த பிறகு) கூறினார் ''சகோதரன் பிரான்ஹாம், இங்கே இந்த அரங்கத்தின் கீழ்ப்பகுதியில் நீர் கண்டிராத மோசமான காட்சி இருக்கிறது. மிஸ்ஸிஸிப்பியைச் சேர்ந்த அந்த ஸ்திரீ மனநிலை சரியில்லாதிருந்து, குணமாக்கப்பட்டாள்; அவளுடைய மகன் ஒரு இராணுவ வீரன்; அவள் அங்கு இருபது வருடங்களாய் இருந்தாள்; தன்னுடைய மகனைக் கூட அவளால் அறிந்துக் கொள்ளமுடியவில்லை. நான் அவளுக்காக ஜெபிக்கையில் அவள் சரியான மனநிலைமைக்குத் திரும்பினாள். அது ஒரு தீயை மூட்டினது. அப்பொழுது... அவர் ''இந்த காரியத்தைப் பாருங்கள்'' என்று கூறினார். ஆகவே நான் கீழே சென்றேன். அங்கே ஒரு கனத்த வாலிப ஸ்திரீ இருந்தாள். அவளுடைய கால்கள் விரைத்துக் கொண்டு நீண்டிருந்தது. அந்த மனநிலை காப்பகத்தில் போடப்பட்டிருந்த ஒரு சிறிய துணிதான் அவள் மேல் இருந்தது. அவள் தன் கால்களை அசைக்க முடியாதிருந்ததால் தன் கால்களால் இரண்டு வருடங்களாக நிற்க முடியாதிருந்தது. அவளுடைய கால்களிலும் கைகளிலும் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தன் கைகளையும் கால்களையும் மேலே நோக்கி நீட்டிக் கொண்டு படுத்திருந்தாள். நான் அந்த மனிதனிடம் ''இந்த பெண்ணிற்கு என்ன நேரிட்டது?'' என்று கேட்டேன். அவர், “சகோதரன் பிரான்ஹாம், இவள் தன் சுயநினைவை இழந்துவிட்டாள். ஒரு குழந்தை பிறந்தவுடன் அவளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு அவளுக்கு ஏதோ நடந்துவிட்டது. அவள் மனதில் ஏதோ சரியில்லாமல் போய்விட்டது. அவள் இரண்டு வருடங்களாக மனநிலை காப்பகத்தில் இருக்கின்றாள்” என்றார். பிறகு கூறினார்... ''ஏன் அவளுக்கு இரத்தம் வடிகின்றது?“ என்று நான் கேட்டேன். அவர் அவளை காப்பகத்திலிருந்து அனுப்ப மறுத்துவிட்டார்கள். நோயாளியை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் (ambulance) வாகனத்தையும் அவளுக்காக கொடுக்க மறுத்துவிட்டார்கள். ஏனென்றால் அவள் மூர்க்கவெறி கொண்டவளாய் இருந்தாள். நான் ஒரு சகோதரனுடைய செவர்லே காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நான்கு பேர்களைக் கூட்டிக் கொண்டு இவளை காரின் பின் பக்கத்தில் வைத்து பிடித்துக் கொண்டு வந்தோம். நாங்கள் இங்கே பிரயாணப்படுகையில் அவள் ஜன்னல்களை உதைத்துக் கொண்டே இருந்தாள்'' என்று கூறினார். (அவள் இருந்த மனநிலை காப்பகத்திலிருந்து சுமார் 90 மைல்கள்) நான் “இதனால் தான் அவளுக்கு இரத்தம் வடிந்து கொண் டிருக்கிறதா? நல்லது, நான் சென்று அவள் மீது கைகளை வைப்பேன்'' என்று கூறினேன். அவர் “ஓ, நீர் அதைச் செய்யாதீர், அவள் உம்மை கொன்று விடுவாள்'' என்று கூறினார். நான் அப்பொழுது ஒரு வாலிபனாய் இருந்தேன். நான் இந்த ஊழியத்தில் வந்து, ஓ, சுமார் ஒரு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன். ''தேவன் அதைப் பார்த்துக் கொள்வார்'' என்று நினைத்துக் கொண்டு, நான் தரையில் சென்று அவள் மீது கைகளை வைத்து, ''சகோதரியே, எப்படி இருக்கிறாய்?'' என்றேன். 15நான் கவனித்துக் கொண்டிருந்தது மிகவும் நல்ல காரியமாகிவிட்டது. அந்த பெரிய சக்தி படைத்த கை (பிசாசினால் பீடிக்கப்பட்டு பத்து மடங்கு சக்தியை பெற்றிருந்தது). அவள் என் கால்களை வந்து ஆக்ரோஷமாக ஆட்டினாள். அவள் அப்படி செய்தபோது, என் கால் அவள் மார்பை நோக்கி சென்று மோதினது. என் கைகளையும் அவள் ஆக்ரோஷமாக குலுக்கினாள். நான் அவளிடமிருந்து ஓடினேன். வேகமாக படிகளின் மேலே ஓடினேன், அவளுடைய கணவன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவள் ஒரு பாம்பைப் போல வளைந்து, நெளிந்து எனக்குப் பின் வந்தாள். தன்னுடைய முதுகில் நகர்ந்து தன் கைகளையும் கால்களையும் மேல் நோக்கித் தூக்கியவாறே என்னைத் துரத்தினாள். அந்த பயங்கரமான, கொடூரமான சத்தத்தை இன்னும் என்னால் கேட்க முடிகிறது. ஒரு பாம்பைப் போல தரையில் ஊர்ந்து கொண்டு வந்தாள். அவள் சுமாராக நூற்று எழுபது பவுண்ட் எடை இருந்திருப்பாள். அவள் வந்து, திரும்பி தன்னுடைய பெரிய வலுவான கால்களால் சுவற்றை வேகமாக உதைத்தாள். அங்கே இருந்த ஒரு பெஞ்சை உதைத்து தன் தலையை உடைத்துக் கொண்டாள். தலை எலும்பின் ஒரு பகுதி உடைந்து இரத்தம் வடிந்தது. அந்த பெஞ்சிலிருந்து உடைந்த ஒரு கொம்பை எடுத்து தன் கணவனை நோக்கி வீசினாள். சுவற்றிலிருந்த சிமெண்ட்டுகளை உடைத்தெறிந்தாள். நாங்கள் எங்கள் தலைகளை கீழே சாய்த்து ஒளிந்து கொள்ள வேண்டியதாயிற்று. அவர், ''நான் இதைக் கூறினேன் அல்லவா?'' என்றார். “நான் இதைப் போன்ற காரியத்தை என் ஜீவியத்திலே கண்டதேயில்லை'' என்றேன். ''சகோதரன் பிரான்ஹாம், அது என்னவாயிருக்கும்?'' என்று கேட்டார் ''அதுதான் பிசாசு“ என்று நான் கூறினேன். அப்பொழுது அவள் மேலே ஊர்ந்து வந்து வில்லியம் பிரான்ஹாம், “என்னிடம் செய்வதற்கென்று உனக்கு ஒன்றும் கிடையாது. நான் இவளை இங்கே கொண்டு வந்தேன்” என்று கூறினாள். அவளுடைய கணவன் அதைப் பார்த்து என்ன, தான் யார் என்பதே அவளுக்கு தெரியாதிருக்கையில், “எப்படி அவளுக்கு... அவளுக்கு உம்மைக் கூடத் தெரியாதே” என்று கேட்டார். நான் கூறினேன். “அது அவள் அல்ல; அது பிசாசு. அதுதான் அந்த பிசாசு''. ஆகவே நான் “சாத்தானே, உன் மேல் எனக்கு அதிகாரம் இல்லை என்பதை நீ அறிந்து தெரிந்து வைத்திருக்கிறாய். ஆனால் என்னுடைய தேவனுக்கு உண்டு. ஏனெனில் கல்வாரியில் உன்மேல் அவர் ஜெயங் கொண்டார். ஆகவே ஜனங்களை உண்மையாக இருக்கும்படி செய்தால், ஜெபத்திற்கு முன் எதுவும் நிற்காது என்று ஒரு தூதன் என்னிடம் கூறி, எனக்கு அளித்த தெய்வீக வரத்தைக் கொண்டு... இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவளை விட்டு வெளியே வா'' என்று கூறினேன். ஒரு மாற்றமும் இல்லை. 16பழைய மேற்சட்டைகளை அணிந்திருந்த அவளுடைய சொந்த கணவன் தன் கைகளை என் கழுத்தைச் சுற்றி வைத்து என்னை அணைத்துக் கொண்டார். அவர், “அவளை நான் என்ன செய்ய வேண்டும் சகோதரன் பிரான்ஹாம்?'' என்று கேட்டார். நான், “அவர்கள் அனுமதித்துக் கொள்வார்களானால் அவளை திரும்பவுமாக மனநிலை காப்பகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்'' என்று கூறினேன். ''நல்லது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?“ என்று அவர் கேட்டார். “நான் என்ன நினைக்கிறேன் என்பது அல்ல, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது தான்'' என்றேன். “அவள் சுகமாவாள் என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்று அவர் கூறினார். ''நீர் செய்ய வேண்டியது அது மாத்திரமே“ என்றேன். ''அவள் சுகமடைவாள் என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்றார். அந்த இரவு அவர்கள் பிரயாணம் செய்கையில் அவர்களை அவள் எந்த தொந்தரவும் செய்யவில்லை. அடுத்த நாள் காலை அவளை எழுப்ப வந்த போது, அவள் எழுந்து உதவியாளரிடம் பேசினாள். இரண்டாவது நாள் அவள் மருத்துவமனையிலிருந்து, பூரண சுகமடைந்தவளாய் அனுப்பப்பட்டாள். 17அதற்கு பிறகு சுமார் ஆறு மாதங்கள் கழித்து நான் அர்க்கான் ஸாஸில் உள்ள ஜோன்ஸ் போராவில் சகோ. ரிச்சர்ட் ரீட் அவர்களுடன் ஓல்ட் பேஷன் ரிவைவல் ஹவர் கூடாரத்தில் இருந்தேன். அது இங்கே இருப்பதை விட நிறைய பேரை கொள்ளத் தக்கதான ஒரு பெரிய பாப்டிஸ்ட் கூடாரமாக இருந்தது. நான் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தேன்... யாரோ என்னை நோக்கி கையசைத்துக் கொண்டிருந்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவளால் நீண்ட நேரம் பொறுத்திருக்க முடியவில்லை. “அவள் என்னை ஞாபகம் கொண்டுள்ளீரா?'' என்றாள். நான்கு அல்லது ஐந்து சிறு பிள்ளைகளை வைத்திருந்தாள். நான் ''எனக்கு தெரியவில்லை என நம்புகிறேன்'' என்றேன். அவள், “நானும் இதற்கு முன்னால் உங்களைப் பார்த்ததில்லை'' என்றாள். ”முதுகின் மீது ஊர்ந்து கொண்டிருந்த ஸ்திரீ நான் தான்'' என்று கூறினாள். அந்த ஆறு மாத காலத்தில் அவளுடைய கணவன் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டு, வெளியே சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் செல்கின்றார். ஓ, என்னே! அது என்ன? அந்த ஆறாவது புலனை பற்றிக் கொண்டிருத்தல். விசுவாசம் அவ்வாறு கூறினது. அவர் அதை நான் என் இருதயத்தில் வைத்திருந்தேன் தேவன் மற்றவர்களுக்கு இதைப் போன்ற காரியத்தை செய்கிறார் என்றால், “என்னுடைய மனைவிக்கும் அதைச் செய்வார்” என்று கூறினார். அவர் அதைப் பற்றிக் கொண்டே இருந்தார். எதுவும் அவரை அதினின்று பிரிக்கக் கூடாதிருந்தது. ஆறாவது புலனாகிய அது திறந்து விடப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரும் வல்லமையை அதற்கு அளிக்கப்பட்டால் அந்தக் காரியத்தைத்தான் அது செய்யும். 18ஒரு நாள் இரவு என்னுடைய வீட்டிற்கு நான் வந்து என்னுடைய கட்டிலின் மேல் படுத்துக் கொண்டிருந்தேன். இந்த சாட்சிகள் உங்களுக்கு தேவையாய் இருக்குமானால் நான் கொடுக்கும் முகவரிக்கு நீங்கள் எழுதி பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஜார்ஜி கார்டர், மில் டெளன், இண்டியானா, என்று எழுதுங்கள். அது அவளிடம் சேரும். இண்டியானாவிலுள்ள, மில்டௌனைச் சேர்ந்த ஜார்ஜிகார்டர். தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்காத ஒரு சபையை அவள் சேர்ந்தவளாய் இருந்தாள். அவள் சிறு பெண்ணாய் இருந்தபோது அவள் பியானோ கருவி பாடங்களை கற்றாள். அவளுடைய மாமன் அவளை பியானோ வகுப்பிற்கு அழைத்துச் செல்வான். இந்த பெரிய மனிதன் சிறுமியாய் இருந்த இவளை மானபங்கப்படுத்தினான். இதனால் அவளுக்கு காசநோய் (TB) ஏற்பட்டது. ஆதலால் அவள் ஒன்பது வருடம் எட்டு மாதங்களாக தன் முதுகைத் தாங்கியவாறு நேராகவே முழுவதுமாக படுக்கையாய்க் கிடந்தாள். அவளுடைய பெண் சுரப்பிகளிலும், நுரையீரல்களிலும், உடல் முழுவதும் காச நோயால் (TB) பீடிக்கப்பட்டிருந்தது. அவள் 37 பவுண்ட் எடை மாத்திரமே கொண்டவளாக இருந்தாள். இப்பொழுது அவளுக்கு நீங்கள் கடிதம் எழுத விருப்பமிருந்தால் நீங்கள் எழுதலாம், அது உங்கள் பிரியம். உங்களுக்கு பதில் எழுத மகிழ்ச்சி உடையவளாய் அவள் இருப்பாள். அந்தச் சிறு பெண்ணைக் குறித்த ஒன்றுமே எனக்குத் தெரியாது. மில்டெளன் எங்கிருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது. ஆகவே, நான் வீட்டிற்கு வந்தேன், என் தாயாரைப் பார்த்தேன். ''நான் இன்றிரவு படுக்கைக்கு சீக்கிரமாக செல்கிறேன், ஏனென்றால் நான் சென்று கர்த்தரைக் குறித்து நான் தியானிக்கப் போகிறேன்'' என்றேன். “சரி பில்லி, நீ படுக்கச் செல்” என்று அவர்கள் கூறினார்கள். 19நான் அறைக்குள் சென்று, நீண்ட நேரமாக ஜெபித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்த பிறகு நான் அங்கே பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே அம்மா, பழைய காலத்து கிராமத்து ஸ்திரீகளில் ஒருவர், தன்னுடைய துணிகளைத் துவைத்து ஒரு நாற்காலியில் வைத்திருந்தார்கள் (ஸ்திரீகளாகிய நீங்கள் அவ்வாறு செய்திருக்கிறீர்களா, இல்லையா) என்று தெரியவில்லை. அங்கே அத்துணிகளை சலவைப் பெட்டியால் தேய்த்து வைக்கும் வரை அங்கே வைத்திருப்பார்கள், வெறுங்காலுடன் நின்று சலவை செய்வார்கள். ஆகவே நான்... என் தாயார் அங்கே நாற்காலிகளை வைத்து வீட்டில் உள்ள எல்லாப் பையன்களுடைய துணிகளையும் அதின்மேல் வைப்பார்கள். நான் அப்பொழுது, வீட்டில் தங்கியிருந்தேன். என் மனைவியை இழந்து நீண்ட காலம் கழிந்திருந்தது. நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நாற்காலி என்னை நோக்கி வருவதைப் போல இருந்தது. நான் பார்த்தபோது என்னை நோக்கி ஒளியாய் வந்து கொண்டிருப்பதைப் போல தெரிந்தது. அது நேராக என்னிடம் வந்தது. ஏதோ ஒரு வனாந்திரமான இடத்திற்கு நான் செல்லத் துவங்கியது போல காணப்பட்டது. ஒரு சிறிய ஆட்டுக் குட்டி “பா, பா'' என்று சத்தமிடுவது போல எனக்குக் கேட்டது. நான் ''ஓ, பாவம், அந்த சிறிய பிராணி எங்கோ மாட்டிக் கொண்டு இருக்கிறது'' என்று நினைத்தேன். ஆகவே நான் புதர்களில் உள்ளே அதை கண்டு பிடிக்க முயற்சித்தேன். நான் சிறிது அருகே செல்கையில் என்னால் அதை மறுபடியுமாக கேட்க முடிந்தது; ”எங்கே அது இருக்கிறது?'' என்று நான் கூறினேன். “பாவம் அந்த சிறிய பிராணி'' என்று நான் நினைத்தேன். நான் இன்னுமாக புதர்களைப் பிடுங்கி அருகில் சென்றேன். அது'பா, பா'' என்று சப்தமிட்டுக் கொண்டிருந்தது. ”பா... பா...“ என்ற அதனுடைய சப்தம் ''மில்டெளன், மில்டெளன்'' (Mill Town) என்று என் காதில் ஒலித்தது. அதை கண்டுபிடிக்க நான் முயன்று கொண்டிருந்தேன். நான் தரிசனத்தை விட்டு வெளியே வந்தேன். ”மில்டெளன் எங்கே இருக்கிறது?'' என்று நான் எண்ணினேன். “மில்டெளனில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. அங்கே ஏதோ ஒரு ஆட்டுக்குட்டி அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது எங்கேயிருந்தாலும் சரி” என்று நான் எண்ணினேன். 20நான் வெளியே சென்று புதன் இரவு என் சபையிடம் மில்டெளன் (Mill Town) என்ற பட்டினம் எங்கேயாவது இருக்கிறதா என்று கேட்டேன். யாருக்குமே அதைத் தெரியவில்லை. நல்லது, ஞாயிற்றுக் கிழமை மறுபடியுமாக, “மில்டெளன் என்ற பெயரை உடைய இடம் யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டேன். ஜார்ஜ்ரைட் (என்னுடைய கூடாரத்தைச் சேர்ந்தவர்கள் ஜார்ஜ்ரைட் அவர்களை அறிவார்கள், அவர் அநேக வருடங்களாக அங்கே வருபவர்), அவர் கூறினார் “ஏன் சகோ. பிரான்ஹாம், மில்டெளன் இங்கிருந்து தெற்கே சுமார் 35 மைல்கள் தூரம் கடந்து இருக்கிறது. அந்த மலையின் மேல் ஒரு சிறிய நகரம் உள்ளது. ''அது எங்கே உள்ளது என்று எனக்குத் தெரியும்” என்று கூறினார். ''என்னை அங்கே அழைத்து செல்வீர்களா?“ என்று கேட்டேன். “நான் செய்வேன்'' என்றார் ''நல்லது, வருகின்ற சனிக்கிழமை நான் வருவேன்'' என்று நான் கூறினேன். 21நல்லது, நான் மில்டெளனிற்கு சென்றேன். நாங்கள் அங்கே சென்றோம்; அங்கே இரண்டு மளிகை கடைகள் இருந்தன. மக்கள் வாகனங்களிலும், பக்கி என்ற வாகனத்திலும் (buggies) வந்ததை நான் பார்த்தேன். (இங்கே கெண்டக்கியில் மலைகளின் கீழே செய்வது போல) நான் நல்லது, “இங்கே ஒன்றையும் என்னால் காண முடியவில்லை'' என்று நினைத்தேன். நான் உள்ளே சென்று, ஒரு மனிதனிடம், ஒரு சிறிய மரப்பெட்டியை வாங்க முடியுமா என்று கேட்டேன். “ஆம், அதை வைத்து நீர் என்ன செய்யப் போகிறீர்?'' என்று கேட்டார். ''இங்கே வெளியில் நிறைய மக்கள் நின்று கொண்டிருக்கின்றனர்; நான் நிற்பதற்கு ஒரு மேடையை செய்ய விரும்புகிறேன். நான் ஒரு பிரசங்கி. நான் பிரசங்கம் செய்ய விரும்புகிறேன்'' என்று கூறினேன். அதற்கு அவர், ''நீர் இதற்கு ஒன்றுமே எனக்கு தர வேண்டாம். இதை அங்கே எடுத்துச் செல்லுங்கள். அதனால் பரவாயில்லை'' என்றார். 22ஆகவே நான் பெட்டியைப் பெற்றேன். நான் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தபோது, சகோ. ரைட் கீழே வருவதைக் கண்டேன். அவர், ''சகோ. பிரான்ஹாம் அந்த மலையின் மேல் சிலவற்றை வாங்க விரும்புகிறேன், நீர் என்னுடன் மேலே வர விரும்பினால் என்னுடன் வரலாம்'' என்று கூறினார். நான்,''அது சரி, இங்கே என்னுடைய பெட்டியை கீழே வைப்பேன். நான் திரும்ப வரும் நேரத்தில் சிறிது அதிகமான மக்கள் கூட்டம் இருக்கும்'' என்று கூறினேன். நான் மலையின் மீது சென்றேன். ஒரு பெரிய, பழைய வெள்ளை சபையைக் கண்டேன். ''அது என்ன சபை?'' என்று நான் கேட்டேன். அவர், ''அது ஒரு பழைய பாப்டிஸ்ட் சபை. அந்த போதகர் ஏதோ சிக்கலில் அகப்பட்டுக் கொண்டார். அவர் ஒரு போக்கிரியாக மாறி யாரோ ஒரு மனிதனுடைய மனைவியை மானபங்கப்படுத்தினார். ஆதலால் அவரை சுட்டுக் கொன்றனர். சிக்கல் வலுத்தது. சபையார் சிதறிப் போனார்கள். இனிமேல் சபை அவர்களுக்கு கிடையாது என்று கூறினார். 23நல்லது, நான் அவருடன் சேர்ந்து சபையை சுற்றி நடந்தேன். நான் அப்படி செய்கையில் ஏதோ ஒன்று, ''அந்த சபைக்குச் செல்'' என்று கூறினது. நான் அங்கே சென்றேன் அவர்... “நீங்கள் மலையின் மீது செல்கின்ற வரை நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்'' என்று கூறினேன். ''சரி'' என்று அவர் கூறினார். ''இங்கே அவர்களுக்கு சபை இல்லையா?“ என்று கேட்டேன். ''இல்லை''. நான் கதவைத் திறக்க முயற்சித்தேன், கதவானது திறக்கக் கூடாதிருந்தது. நான், ''பரலோகப் பிதாவே, இந்த சபையைக் குறித்த ஏதோ ஒரு காரியம் இருக்கிறது என்று நீர் என்னை அழைத்தீரா? புதரில் சிக்கிக் கொண்டிருந்தது இந்த சபை தானா? நீர் மில்டெளன் (Mill Town) என்று சப்தமிட்டது இதுதானா? நான் வரவேண்டியது இங்குதான் என்றால், எனக்கு இந்த கதவைத் திறந்தருளும்'' என்று கூறினேன். நான் கதவை பிடித்து அசைத்தேன், அது திறக்காதிருந்தது. நல்லது, நான் படியில் உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து யாரோ ஒரு மனிதன் சபையை சுற்றி நடந்து வந்து, ''எப்படி இருக்கிறீர்'' என்றான். ''நீர் எப்படி இருக்கிறீர் ஐயா“ என்று நான் கேட்டேன். ''நீர் சபை உள்ளே செல்ல விரும்புகிறீரா?'' என்று கேட்டான். நான், “ஆம் ஐயா'' என்று கூறினேன். அவர், “சாவி என்னிடம் உள்ளது” என்று கூறி கதவைத் திறந்தார். 24நான் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “இதற்கு உரிமையாளர் யார்?'' என்று கேட்டேன். ''இந்த நகரம்“ என்று கூறினார். ''அவர்கள் இங்கே சில கூட்டங்கள் வைத்தால் நலமாயிருக்கும்'' என்றேன். ''தகவல் அளிக்கும் இடத்திற்குச் சென்று அவர்களிடம் கேளுங்கள்'' என்றார். ஆகவே நான் அங்கே சென்று, ''நான் பொதுத் துறையில் வேலை பார்க்கின்றேன்; நான் அதில் ஒரு மீட்டரை பொருத்தி, அங்கே சில கூட்டங்களை நடத்த நான் விரும்புகிறேன்'' என்று கேட்டேன். ''அதற்கு வாடகை எதுவும் கிடையாது, நீங்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுங்கள், சென்று நடத்துங்கள்'' என்று அவர்கள் கூறினர். “உமக்கு நன்றி ஐயா, நான் அதை நடத்துகிறேன்'' என்று கூறினேன். ஆகவே நான் அங்கே சென்று ஒரு மீட்டரைப் பொருத்தி, ஒரு எழுப்புதலை ஆரம்பித்தேன். முதலாம் இரவு, “தேவன் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். தேவன் தேவனாகவே இருக்கிறார்'' என்று பிரசங்கித்தேன். சகோதரன் ஹால்... ஒரு மனிதன் அங்கே ஒரு சிறிய காகிதத் துண்டில் ஏதோ எழுதிக் கொடுத்தார். சகோதரன் ஹால் இல்லை; சகோ. ரைட் ஒரு சிறிய காகிதத்தில், ”இங்கே வந்து சிறிய பில்லி சண்டே (Billy Sunday) கூறுவதைக் கேளுங்கள்'' என்று எழுதியிருந்தார். நல்லது அந்த இரவு நான் ஒரு பெரிய மக்கள் கூட்டத்தைக் கண்டேன். திரு. ரைட், அவரது இரண்டு குமாரத்திகள், ஒரு மகன், ஐந்நூறு பேரை கொள்ளத் தக்கதாக ஒருசபை. நல்லது, என்னால் முடிந்த வரை கடினமாகப் பிரசங்கம் செய்தேன். 25அடுத்த இரவு அதே கூட்டத்தார் வந்தனர். சரியாக நேரத்தில் தானே... பிரசங்க பீடத்திற்கு பின்னால் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். ஆராதனையை முறையாக துவக்க நான் தயாராகிக் கொண்டிருந்தேன். அங்கே தூசி படிந்து இருந்த பாட்டுப் புத்தகங்களை விநியோகித்தேன். நாள் முழுவதும் வேலை செய்து, எல்லா தூசியையும் தட்டி எடுத்து, இப்பாட்டு புத்தகங்களை வைத்து ஆரம்பித்தேன். சகோ. ரைட்டிடம் ஒன்றை கொடுத்தேன், எல்லாருக்கும் ஒன்றைக் கொடுத்தேன். எல்லோரும் சென்று அமர்ந்தனர். அப்பொழுது கதவின் மேல் ஏதோ சம்பவித்ததை நான் கேட்டேன் (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு முறை தட்டுகிறார் - ஆசி) நான் பார்த்தபோது ஒரு மனிதன் உள்ளே வந்தான். சகோ. ரைட், “ஓ, என்னே, அவன் இந்த தேசத்தில் உள்ள மிகப் பெரிய மாய்மாலக்காரனும், நாத்திகனும் ஆயிற்றே” என்றார். அவன் வீட்டின் பக்கத்தில் உள்ள பழைய குழாயை உடைத்து போட்டு, ஒரு பல் நீட்டிக் கொண்டு, கண்கள் மேல் மயிர் தொங்கிக் கொண்டும், வேகமாக உள்ளே வந்து “சிறிய பில்லி சண்டே (little Billy Sunday) எனப்படும் மனிதன் எங்கே?'' என்று கூறினார். நான் நடந்து சென்று, “ஐயா, உங்கள் பெயர் என்ன?'' என்றேன். “நான் பில் ஹால், அங்கே மேலே பூச்செண்டுகள் விற்பவன்'' என்றார். ''நல்லது, நான் சகோதரன் பிரான்ஹாம்“ என்று கூறினேன். “நீ தான் சிறிய பில்லி சண்டே என்பவரா?'' என்றார். நான், “அது தவறு, நான் சிறிய பில்லி சண்டே அல்ல'' என்றேன். மேலும், ''நீர் முன்னே வந்து இங்கு அமரலாம் அல்லவா?'' என்றேன். ''இல்லை நான் இங்கே பின் வரிசையில் இருப்பதிலேயே திருப்தியாவேன்'' என்றார். ''நல்லது, நலமாய் உணருங்கள், இதோ பாட்டு புத்தகம்'' என்றேன். ''எனக்கு எப்படி பாடுவதென்று தெரியாது'' என்றார். ''நல்லது எங்களுக்கும் தெரியாது. ஆனால் நாம் கர்த்தரிடத்தில் மகிழ்ச்சிக்குரிய சத்தமிடுவோம்“ என்றேன். 26ஆகவே நான் மேலே சென்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தேன், நான் ஆரம்பித்தபோது அவர் சற்று முன்னே வந்தார். அவர் சிறிது சிறிதாக முன்னே நகர்ந்து, நான் பீட அழைப்பை விடுக்கையில், அவர் பீடத்தின் மேல் காணப்பட்டார், இப்பொழுது அந்த சபையின் போதகராக இருக்கிறார். பாருங்கள்? இப்பொழுது, அதற்கு பிறகு சிறிது நாட்கள் கழித்து தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கம் செய்ய ஆரம்பித்தேன். அந்த மலையின் மேல் ஒன்பது வருடங்கள், ஆறு - அல்லது எட்டு மாதங்களாக வெளியுலகத்தையே காணாமல் படுத்த படுக்கையாக ஒரு பெண் இருக்கின்றாள் என்று என்னிடம் கூறினார்கள். நான் கூறினேன், “நல்லது, அவர்கள். அவர்களுடைய போதகர் ஒரு ஸ்தாபன சபையில் அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று கூறியிருந்தார். அந்த சுற்று வட்டாரத்தில் இருந்த சபைகள் எல்லாம், ”யாராவது அங்கே சென்றால், துவக்கத்திலேயே சபையிலிருந்து புறம்பாக்கப்படுவீர்கள்'' என்று கூறி வந்தன. ஆகவே அவளுடைய தகப்பன் அந்த சபையிலே ஒரு மூப்பனாக இருந்தார். ஆகவே அங்கே (சகோ. பிரான்ஹாம் நடத்தின ஆராதனைக்கு - தமிழாக்கியோன்) வருவது அவர்களுக்கு சற்று கடினமாக இருந்தது. 27என்னுடைய சிறிய புத்தகம்... “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்'' என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தை அநேகர் வாசித்திருப்பீர்கள். நல்லது, அங்கே... நெயில் என்ற பெயரைக் கொண்ட அந்த சிறிய பெண் சுகமாக்கப்பட்ட சாட்சி அதில் உள்ளது. நல்லது, காசநோயை உடைய ஒரு சிறுமிக்கு மேலே வந்து ஜெபம் செய்ய என்னை அழைத்தனர். நான் வந்து ஜெபிக்க அவள் பெற்றோர் விரும்பினர். நான் மேலே சென்று அவளுக்காக ஜெபித்தேன். நீண்ட நாட்களாக படுக்கையில் கிடந்த அவள் அதே இரவு என்னுடன் சபைக்கு வந்தாள். ஜார்ஜி இதைக் குறித்து கேள்விப்பட்டாள், உடனே அவள் அழ ஆரம்பித்தாள். கடைசியாக அவளுடைய தாயும் தந்தையும் நான் வந்து அவளுக்காக ஜெபம் செய்ய சம்மதித்தனர். ஆனால் நான் ஜெபம் செய்ய வரும்போது அவர்கள் அந்நேரத்தில் வீட்டில் இருக்க விரும்பவில்லை. அவர்கள் வெளியே சென்றுவிட்டனர். ஆகவே நான் உள்ளே சென்றேன். 28பரிதாபத்திற்குரிய அந்த சிறுபெண். அவள் இரும்ப முயற்சித்தாளானால்; அவ்வளவு தான். (சகோ. பிரான்ஹாம், ஒரு வியாதியால் பீடிக்கப்பட்ட நபர் எப்படி இரும்புவார் என்பதை இரும்பிக் காண்பிக்கிறார் - ஆசி) ''எச்சிலைத் துப்பும் பாத்திரத்தைக் கையில் பிடிக்கக் கூட அவளால் முடியவில்லை“. அவள் கூறினாள், (மிகவுமாய் சோர்ந்து போய் இருந்த ஜார்ஜியின் சத்தத்தைப் போல பேசிக் காண்பிக்கின்றார் - ஆசி)... அந்த சிறிய புத்தகத்தை நான் வாசித்தேன் என்றாள். நான் பார்த்தபோது ”இயேசு, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்“ என்ற அந்த புத்தகத்தில் என்னுடைய படம் இருந்தது. அவள் நான்... விசுவாசிக்கிறேன்... அவர் என்னை சுகமாக்குவார்'' என்று கூறினாள். நான் “நல்லது, சிறு பெண்ணே, உன்னுடைய சபையில் பிரிவினையை ஏற்படுத்த நான் விரும்பவில்லை சிறு பெண்ணே. ஆனால் உன்னுடைய தாயும், தந்தையும் எங்கே?'' என்று கேட்டேன். கண்ணீர் (அழுவதற்கு தேவையான ஈரப்பசை அவளுக்கு எப்படி ஏற்பட்டதென்றே எனக்குத் தெரியவில்லை). அவளுடைய முகத்தில் வடிந்தது, அவளுடைய மண்டை எலும்புகளின் இணைப்பு எங்கெங்கு இருக்கின்றது என்பதை கண்டு கொள்ளும் அளவிற்கு அவள் காணப்பட்டாள். தேவனுடைய வல்லமையை நிராகரிக்கும் ஒரு பிரசித்திப்பெற்ற சபையைச் சேர்ந்தவளாய் அவள் இருந்தாள். அவர்கள் பரிசுத்த ஆவியிலும் மற்ற காரியங்களிலும் விசுவாசம் கொள்ளாத ஒரு நவீன பரிசேயராய் மட்டுமே இருந்தனர். ''தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சபையை மாத்திரம் சேர்ந்திரு'' என்று அவர்கள் கூறினர். ஆகையால் அவர்கள் மத்தியில் எந்த ஒரு குழப்பத்தையும் விளைவிக்க நான் விரும்பவில்லை. 29ஆகவே நான் ''நல்லது, இப்பொழுது உனக்கு நான் ஜெபிக்கப் போகிறேன்'' என்று கூறினேன். அவள், ''நெயில் சிறுமிக்கு செய்தது போல நீர் செய்வீரா?'' என்று கேட்டாள். நான், “சகோதரியே, அது ஒரு தரிசனமாய் இருந்தது. தேவன் என்ன செய்ய சொல்கிறாரோ அதைத்தான் என்னால் செய்ய இயலும்'' என்று கூறினேன். நான் அவளுக்காக ஜெபித்தேன்; எந்தவித முன்னேற்றமும் அவளிடத்தில் இல்லை. நான் என்னுடைய எழுப்புதல் கூட்டங்களை முடித்தேன். வாரத்தின் கடைசியில் சுமார் அறுபதிலிருந்து எழுபத்தைந்து பேர் ஞானஸ்நானத்திற்கென்று இருந்தனர். தேவன் தன்னை சுகப்படுத்தினால், லிட்டில் புளு ரிவர் என்ற இடத்தில் உள்ள டாட்டன் போர்ட் என்னும் இடத்திற்குச் சென்று ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வதாக உறுதியளித்தாள். 30நல்லது அந்த ஞானஸ்நான நாள் வந்தபோது, நான்அங்கு சென்றேன். தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்து என்னை கேலி செய்த ஒரு பிரசங்கி அங்கு இருந்தார். ஓ, என்னே, என்னே, மலையின் மேலே இருந்த கூடாரத்தில் அவர் எழுப்புதலை அடைந்தார். நான் தண்ணீரில் அங்கே ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, ''தேவ தூதர்கள் இங்கு இருப்பது எனக்குத் தெரிகின்றது'' என்று கூறினேன். அவருடைய சபையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் (அந்த சேற்றுத் தண்ணீரிலே அழகான வெள்ளை உடைகளை அணிந்து) அங்கே நடந்து வந்து கிறிஸ்தவ ஞானஸ்நானத்தைப் பெற்றார்கள், ஒவ்வொருவரும். அது சரி. ஓ, என்ன ஒரு சமயம். திரு. ரைட் அவர்கள் வீட்டில் சாயந்திர ஆகாரம் உண்ண புறப்பட்டோம். அப்பொழுது நான், “இன்றிரவு கூட்டத்திற்குச் சென்றுவரும் முன் ஆகாரம் உண்ண எனக்கு மனமில்லை. நான் மேலே சென்று ஜெபிக்கப் போகின்றேன். அந்த சிறிய பெண்ணைக் குறித்து என் இருதயத்திலே பாரப்படுகிறேன்'' என்று கூறினேன். நான் அந்த மலை ஓரத்திலே சென்று ஜெபிக்க ஆரம்பித்தேன். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு அதே சிறிய புதர்அண்டை நான் இருந்தேன். நான் முழங்காற்படியிட்டு ஜெபித்து தேவனுக்காக காத்துக் கொண்டிருந்தேன். நான் அமைதியாய் இருக்க முயற்சித்தேன். அங்கே புல்லிலுள்ள பச்சை பூச்சிகள் என் கால்களைச் சுற்றி அரிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஜெபத்தையோ அல்லது சரியான காரியத்தையோ நீங்கள் செய்கையில் பிசாசு எப்படி உங்களுக்குத் தடைகளைக் கொண்டு வருகிறான் என்பதை கவனியுங்கள். ஆகையால் நான் அங்கே திரும்பிச் சென்றேன்; மறைந்து கொண்டிருந்த சூரியனின் ஒளி என் கண்களில் பிரகாசித்தது. நான் அந்த இடத்திற்குச் சென்றபோது, எல்லாவிடங்களிலும்... கடைசியாக விட்டுவிடலாம் என்று இருந்தேன். ஆனால் நான் ''தேவனாகிய கர்த்தாவே, குச்சிகளோ அல்லது பாறாங்கற்களோ என் கால் முட்டியில் காயத்தை உண்டாக்கட்டும், என்னவாயிருந்தாலும் சரி, நான் ஜெபிக்கிறேன்'' என்று கூறி, நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். 31சிறிது நேரத்திற்குள்ளாக நான் ஊக்கமாக ஜெபிக்க ஆரம்பித்தேன், நான் பார்த்தபோது சிறிய பூக்கள் நிறைந்த மரப்புதரில்... அது என்ன விதமான புதர் என்று உங்களுக்குத் தெரியுமா? ஓ, நிச்சயமாக, ஓஹியோவிற்கு (Ohio) அது என்ன என்று தெரியும். சிறிய பூக்கள் அடங்கிய மாப்புதர் அங்கே அந்த ஒளி, அந்த தேவ தூதன், அதன் படத்தை இங்கே வைத்துள்ளீர்கள்; அந்த ஒளி அந்த புதருக்கு வெளியே பிரகாசித்துக் கொண்டிருந்த அந்த ஒளி, “எழுந்து நில்'' என்று கூறிற்று. ''ஆம், என் கர்த்தாவே'' என்று நான் கூறினேன். ''கார்டெர்ஸ் வழியாகச் செல்“ என்றது. அவர் கூறினது அதுவேயாகும். 32நல்லது, அந்த மணி அடிப்பதை நான் கேட்டபோது... திரு. ரைட் என்னிடம் ''அந்த மணி அடிக்கையில் தாயார் மேஜையின் மேல் ஆகாரத்தை வைத்திருப்பார்கள், நீங்கள் வாருங்கள்'' என்று கூறியிருந்தார். அது பழைய காலத்து கிராமப்புற மணி. அவர், ''அவள் (தாயார்) மணி அடிக்கையில், நீங்கள் வரலாம்'' என்று சொல்லியிருந்தார். நான் அதைக் கேட்டேன். ஆனால் நான் தரிசனத்தில் இருந்தேன், ஆதலால் என்னால் செல்ல முடியவில்லை. ஒரே சமயத்தில் இரண்டு இடங்களிலும் தேவன் பதிலளிக்கிறார், கிரியை செய்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதே நேரத்தில் சிறிய ஜார்ஜி, நான்அந்த இடத்தை விட்டு செல்லப் போவதை அறிந்திருந்தவளாய் மிகவுமாக தளர்வடைந்தாள், அவள் அழுதாள். ஏனென்றால் அவள் தேவனுடன் பொருத்தனையின் படியே அவள் வந்து ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்பினாள். ஆதலால் அவள் மிகவுமாக அமைதியற்ற நிலையை அடைந்தாள். அருமையான ஸ்திரியாகிய அவளுடைய தாயார், சமையல் அறைக்குள் சென்று, ஜார்ஜிக்கும் அவளுக்கும் இடையே இருந்த கதவை மூடி, முழங்கால்படியிட்டு “ஓ, பரலோகத்தின் தேவனே, எங்கள் இடத்திற்கு வந்திருக்கிற அங்கே கீழே இருக்கின்ற அந்த ஆள் மாறாட்டக்காரனுக்கு - வஞ்சகனுக்கு எதையாவது செய்யும். இந்த ஒன்பது வருடங்களாக படுக்கையிலேயே கிடக்கின்ற என்னுடைய பரிதாபத்திற்குரிய சிறிய பெண் ஒரு தடவை கூட என்னிடம் குறைபட்டுக் கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுதோ அவன் வந்து, இவளிடம் சுகமளிக்கும் நபர் அல்லது யாரோ ஒருவரைப் பற்றிக் கூறி இவள் மனதை குழப்பிவிட்டான். கர்த்தாவே, அந்த மனிதனைக் கடிந்துகொள்ளும், அந்த மனிதனைக் கடிந்துகொள்ளும். இந்த பிரதேசத்தை விட்டு அவனைத் துரத்திவிடும். பரிதாபத்திற்குரிய என்னுடைய சிறு பெண் ஜீவிக்கத் தக்கதான எந்த நம்பிக்கையும் இல்லாமல் இங்கே படுத்தப் படுக்கையாய் இருக்கின்றாள், அவள் அங்கே படுத்துக் கொண்டிருக்கிறாள். அந்த வஞ்சகன் வந்து அவளுக்கு பொய்யான நம்பிக்கையை கிளரி விட்டுள்ளான்...'' என்று ஜெபிக்க ஆரம்பித்தாள். அவள் (அந்த தாய் - தமிழாக்கியோன்) அதைக் குறித்து உண்மையுள்ளவளாய் இருந்தாள். 33அவள் கூறினாள். இப்பொழுது இது அவளுடைய (அந்த தாய் - தமிழாக்கியோன்) சாட்சி. நான் அங்கே இருக்கவில்லை. அவள் கூறினாள்: தான் எழுந்தபோது யாரோ வருவதைப் போன்ற ஒரு சத்தத்தை அவள் கேட்டாள். அவளுடைய மகள் சிறிது தூரம் தள்ளி இருக்கும் மலையில் வாழ்ந்து வந்தாள். ஆகவே அவளுடைய மகள் தான் வருவதாக எண்ணினாள். அவள் திரும்பிப் பார்த்து கூறினாள், “அங்கே அந்த சுவற்றின் மேல் சூரியன் கீழே சென்று மறைந்து கொண்டிருந்தது. (அதே நேரத்தில் நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன்). (இங்கே தீர்க்கதரிசி தன்னைப் பற்றி குறிப்பிடுகிறார்- தமிழாக்கியோன்) சுவற்றிலே ஒரு நிழல் வருவதைக் கண்டாள், அது இயேசுவாய் இருந்தது அவள் மேலும், ''நீங்கள் காண்கின்றபடியே, அதே போன்று அவர் தாடியுடன் காணப்பட்டார் என்றாள். அவர் கூறினார், “ஏன் நீ அழுகிறாய்? யார் வருவதென்று அறிவாயா?'' அவள் இங்கே பார்த்தபோது என்னைப் போன்றே சிறிது வழுக்கைத் தலையை உடைய என்னுடைய நிழலைக் கண்டாள், ”இதே வேதாகமத்தை என்னுடைய மார்பில் அணைத்தவாறே, நடந்து வந்ததாகவும், ஒரு மனிதன் என்னைப் பின்பற்றி வந்ததாகவும்'' கூறினாள். அவள் உள்ளே ஓடி, ''ஜார்ஜி, ஒரு விநோதமான காரியத்தைக் கண்டேன், நான் தூங்கி விட்டிருக்க வேண்டும். நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன், ஒரு பிரசங்கி உள்ளே வருவதைக் கண்டேன்'' என்று கூறினாள். 34அதே நேரத்தில் கார் கதவு அடித்துக் கொண்டது. நான் வெளியே சென்று கொண்டிருந்தேன். ஓ, தேவன் கிரியை செய்ய நீங்கள் விட்டு விடுவீர்களானால் இரண்டு முனைகளிலும் அவர் கிரியை செய்து பதிலளிக்கிறவராய் இருக்கிறார். அங்கே ஜார்ஜி எல்லா அவிசுவாசத்தின் மத்தியிலும் விசுவாசித்துக் கொண்டிருந்தாள். தேவன் தன்னை இன்னுமாய் சுகப்படுத்துவார் என்று அவரைப் பற்றிக் கொண்டிருந்தாள். அவர் ஒரு சிறுமியை சுகமாக்குவாரானால் இன்னொரு சிறுமியையும் சுகப்படுத்துவார் என்று விசுவாசித்தாள். ஆம். அவள் என்னைக் கண்டிருந்தாள். நான் அபிஷேகத்தினால் நடந்து சென்றேன். நான் கதவைக் கூட தட்டவில்லை. நேராக கதவைத் திறந்தேன். அவள் தந்தை அவளுக்கு பால் கொண்டு வர அங்கே அருகேயுள்ள இடத்திற்கு சென்றிருந்தார். அப்பொழுது தான் அவருக்கு பால் கறந்து கொடுக்கப்பட்டது. ஆகவே நான் நடந்து சென்றேன். நான்... இந்த ஸ்திரீ, அந்த தாய், அப்படியே மயக்கமுற்று தரையில் விழுந்தாள். ஜார்ஜி அங்கே இருந்தாள். அவள் என்னை ஏறெடுத்துப் பார்த்தாள். ஆகவே நான் கூறினேன், ''சகோதரி, ஜார்ஜி, நீ அன்பு வைத்திருக்கின்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தன் துயரத்தின் தீர்வுக்காக தேவனை நோக்கிக் கதறினாள். தன் கட்டிலிற்கு பின்னால் இருந்த தூணை பிடித்துக் கொண்டு... தன் கை நீளும் அளவிற்கு இருந்த அந்த சிறிய தூணில் இருந்த சுண்ணாம்பை எல்லாம் சுரண்டிவிட்டிருந்தாள். அவளுடைய சபையானது அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று கூறிக் கொண்டிருந்தது. அவள் தேவனுடைய பிள்ளையாய் இருக்கவே பிறந்திருந்தாள். அவள் அந்த வாக்குத்தத்தத்தை பற்றிக் கொண்டிருந்தாள். தேவன் தன்னுடைய இரக்கத்தினால் எனக்கு தரிசனத்தை அளித்து என்னை அங்கே அனுப்பினார். அதோ அது அங்கிருந்தது. நான் கூறினேன், ''சகோதரி ஜார்ஜி, நீ நேசிக்கின்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து... இப்பொழுது நீ யார் என்பது எனக்குத் தெரிகிறது. இங்கே இருக்கின்ற வேத சாஸ்திர கூட்டத்தினிடையே சிக்கிக் கொண்டிருக்கின்ற ஆட்டுக் குட்டி நீ தான். அல்லேலூயா! ஜார்ஜி, நீ நேசித்து வணங்குகின்ற கர்த்தராகிய இயேசு, அந்த நெயில் சிறுமியின் மேல் தொங்கின அதே ஒளியாக சிறிது நேரத்திற்கு முன் அந்த மலையின் மீது என் முன் தோன்றினார். இங்கே வரும்படி என்னிடம் கூறினார். உன்னை விட்டு நீங்க பிசாசிற்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கட்டளையிடுகிறேன், எழுந்து காலூன்றி நில்“ என்று நான் கூறினேன். சாத்தான், “அவள் எப்படி எழுந்து நிற்பாள், அவள் கால்கள் துடைப்பக்கட்டை (broomstick) அளவிற்கு கூட இல்லையே” என்றான். அது ஒரு சிந்தனையாய் இருக்கவில்லை. “எப்படியாயினும் எழுந்திரு!'' எச்சிலைத் துப்பும் பாத்திரத்தை பிடிக்கக் கூட அவளுக்கு பெலன் இருக்கவில்லை. 35அவள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அந்த கட்டிலை விட்டு எழுந்து அந்த தரையின் குறுக்கே நடந்து தேவனைத் துதித்து, வெளியில் சென்று உட்கார்ந்து புல்லையும், இலைகளையும் மற்றவைகளையும் ஆசீர்வதித்தாள். ஒன்பது வருடங்களாக அவள் அவைகளைக் காணவேயில்லை. நான் திரும்பி நடந்து சென்றுவிட்டேன். அவளுடைய தாய் எழுந்து அலற ஆரம்பித்து வீட்டு முன் வாசலின் குறுக்கேயும் வெளியேயும் வந்து விழுந்தாள். அந்த சிறுமி இறந்திருக்கலாம் அல்லது ஏதோவொன்று நிகழ்ந்திருக்கலாம் என்று நினைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வரத் துவங்கினர். இங்கே அவள் சுற்றுமுற்றும் நடந்து கொண்டு, இலைகளை தட்டிக் கொடுத்துக் கொண்டும் தேவனை துதித்துக் கொண்டும் இருந்தாள். அவளுடைய தந்தை எல்லா சத்தங்களையும் கேட்டு வந்துவிட் டார். அங்கே வெளியே அவருடைய மனைவி படுத்துக் கிடந்தாள். எல்லாரும் அவளுக்கு விசிறிக் கொண்டிருந்தனர். ஆர்கன் கருவி இசைக்கப்படுவதை அவர் கேட்டார். ஆகையால் அவர் வீட்டினுள் சென்றபோது அங்கே அவளுடைய சிறு பெண் உட்கார்ந்து கொண்டு ஆர்கன் கருவியை வாசித்துக் கொண்டிருந்தாள். இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டு எப்பாவத் தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே. 36ஓ, என்னே. அது முதற்கொண்டு தூங்க செல்வதைத் தவிர வேறு எதற்கும் அவள் படுக்கைக்கு செல்வதில்லை. பதினைந்து அல்லது பதினாறு வருடங்களுக்கு முன் நடந்தது. ஓ, அது என்ன? “அவர் ஒருவளை சுகமாக்கினார் என்றால், என்னையும் சுகப்படுத்துவார்'' என்று உள்ளுக்குள் கூறிக் கொண்டிருந்த ஏதோ ஒன்றை, அந்த ஆறாவது புலனை பற்றிக் கொண்டிருத்தல். அல்லேலூயா! அதுஉண்மை. அது சரி. 37இங்கே போர்ட் வேய்னில் (Fort Wayne) வயதான ஜான் ரையானை (John Ryan) நீங்கள் நினைவில் கொண்டுள்ளீரா? தாடி வைத்திருக்கும் மனிதன் அல்ல, வேறொரு குருடரான ஜான் ரையான். அங்கே பெரிய கூடாரத்திலே ஒரு கூட்டத்தை நான் நடத்திக் கொண் டிருந்தேன். நான் முடித்த பிறகு வியாதியஸ்தருக்காக ஜெபிக்க சென்று கொண்டிருந்தேன். இந்த மனிதன் மேலே மாடியின் முன் பாகத்தில் அமர்ந்திருந்தார். அவர் ஒரு கத்தோலிக்கராய் இருந்தார். அவர் வைத்திருந்த அட்டையின் மூலம் அவர் மேடையின் மேல் இருந்த பீடத்தின் அருகே கொண்டு வந்தனர். நான் இருந்த இடத்திற்கு அவர் வந்தபோது, ''உம்முடைய பெயர் ஜான் ரையான்'' என்று கூறினேன். ''அது சரி“ ''நீர் விசுவாசத்தில் ஒரு கத்தோலிக்கன்.'' அவர், “அது சரி'' என்றார். ''நீர் சர்க்கஸில் வாகனம் ஓட்டுவது வழக்கமல்லவா?'' ''அது சரி'' என்று கூறினார். பிறகு நீங்கள் இருபது வருடங்கள் அல்லது அதற்கு மேலாக குருடராய் இருக்கிறீர்கள்''. அவர், ''அது சரி“ என்று கூறினார். லியுகேமியா அல்லது வேறெதோ ஒரு வியாதி அவருடைய கண்ணிற்குள் சென்று அவரை குருடாக்கியது. நான் கூறினேன், ''நீர் ஒரு பிச்சைக்காரர்” “முற்றிலுமாக ஒரு பிச்சைக்காரன் அல்ல, நான் தெருக்களில் உட்கார்ந்து கொண்டிருப்பேன்” என்று அவர் கூறினார். நான் கூறினேன், 'நல்லது, அது சரி, இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்துவார் என்று நீர் விசுவாசிக்கிறீரா?'' ''நான் விசுவாசிக்கிறேன்'' என்று கூறினார். ''கர்த்தராகிய இயேசுவே, நான் இந்த குருட்டுத்தனத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இப்பொழுது நான் கடிந்து கொள்கிறேன். அது இவரை விட்டு நீங்கட்டும்“ என்று அவருக்காக ஜெபித்து கரங்களை அவர் மீது வைத்தேன். நான் திரும்பி பார்த்தபோது தன் பார்வையை பெற்றவராய் நடந்து செல்வதை நான் கண்டேன். நான் ”கர்த்தர் உரைக்கிறதாவது'' (நீங்கள் அதை கவனியுங்கள்) - கர்த்தர் உரைக்கிறதாவது, நீங்கள் உங்கள் பார்வையை பெற்றுக் கொண்டீர்“ என்று கூறினேன். நல்லது, “அவர் என்னால் பார்க்க முடியவில்லை'' என்று கூறினார். நான், “அதனுடன் செய்வதற்கு ஒன்றுமில்லை. துதித்துக் கொண்டு உங்கள் வழியில் செல்லுங்கள்'' என்று கூறினேன். ஆகையால் அவர் சென்றுவிட்டார். 38அங்கே இருந்த ஒரு ஸ்திரீக்கு ஒரு பெரிய களகண்ட மாலை கட்டி (goiter) கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் அவளுக்காக ஜெபித்தவுடன் சில நிமிடங்களில் அது மறைந்து போனது. அங்கே எல்லா உதவியாளர்களையும் தள்ளிக்கொண்டு ஜான் ரையான் மறுபடியுமாக வந்தார். ஜெப வரிசையில் எனக்கு உதவி செய்து கொண்டிருந்த மனிதன் அவரை மேடையிலிருந்து கீழே இறக்க ஆரம்பித்தார். ''நான் அந்த பிரசங்கியை பார்க்கவேண்டும்'' என்று அவர் கூறினார். ஆகையால் அவரை மறுபடியுமாக மேலே கொண்டு வந்தனர். அவர் என்னிடம், ''நான் சுகமடைந்துவிட்டேன் என்று நீர் என்னிடம் கூறினீர் அல்லவா?'' என்று கூறினார். ''நீங்கள் சுகமடைந்தீர்கள்“ என்று கூறினேன். அவர், ''நல்லது, நான் சுகமடைந்திருந்தால் என்னால் பார்க்கக் கூடுமே'' என்று கூறினார். நான் கூறினேன், “ஓ, அதனுடன் செய்தற்கு எதுவுமில்லை. நீர் என்னிடம் கூறினீர்...'' அவர், ''நல்லது நான் சுகமடைந்தேன் என்று நீங்கள் கூறினீரே'' என்றார். நான் கூறினேன், ''நீர் என்னை விசுவாசிப்பதாகக் கூறினீரல்லவா?'' அவர், ''நான் உம்மை விசுவாசிக்கிறேன்'' என்றார். நான் கூறினேன், ''அப்படியென்றால் எதைக் குறித்து நீர் சந்தேகிக்கின்றீர்?'' அவர், ''நல்லது நான் சுகமடைந்திருந்தால், என்னால் பார்க்கக் கூடும் அல்லவா?'' என்றார். நான், ''நீர் பார்வை அடைவீர், நீர் பார்வையை உடையவராக இருப்பதை தேவன் எனக்கு தரிசனத்தில் காண்பித்திருக்கின்றார் என்றால் அது நடந்தாக வேண்டும்“ என்றேன். அவர் ஒரு கத்தோலிக்கராயிருந்ததால் இதைப் போன்ற ஒன்றைக் குறித்து அவருக்கு போதிக்கப்படவில்லை . அவர், ''அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்'' என்றார். நான் கூறினேன், “நல்லது, நீர் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால் தேவன் உமக்கு பார்வையை அளித்தார் என்று உங்கள் பாதையில் அவரைத் துதித்துக் கொண்டே செல்லுங்கள்''. அவர் தள்ளிக் கொண்டே முன் வந்து, ''நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? ஒரு நிமிடம் பொறுங்கள். உங்கள் பெயர் என்ன?“ என்றார். ''பிரான்ஹாம்'' என்று நான் கூறினேன். ''உம்மை நான் தொட்டுப் பார்க்கவேண்டும்'' என்று கூறினார். அவர் தனது கைகளால் என்னைத் தொட நான் விட்டேன். அவர் திரு. பிரான்ஹாம் அவர்களே, நான் ஒரு கத்தோலிக்கனானதால் என்னுடைய பாதிரியாரை விசுவாசிக்க மாத்திரம் கற்பிக்கப்பட்டுள்ளேன். நான் உம்மிடம் உதவிக்கு வந்துள்ளேன். நான் யாரென்றும், என்னுடைய நிலைமைகள் என்னவென்றும் நீர் என்னிடம் கூறினீர். யாரும் அறியாததை தேவன் அறிவார். அது உண்மை என்று நான் விசுவாசிக்கிறேன். ஆதலால் “தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று நான் கூறிக் கொண்டே இருப்பேன் என்று கூறினார். மேடையிலிருந்து அவர் இறங்கிச் சென்றார். 39அடுத்த இரண்டு இரவுகள் என்னால் பிரசங்கிக்கக் கூட முடியவில்லை. நான் இருந்த இடத்தில் அவர் எழுந்து என்னை சுகப்படுத்தினதற்காக, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக” என்பார். நான் பிரசங்கிக்க ஆரம்பிக்கும்போது ''என்னை சுகப்படுத்தினதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ என்று சத்தமிடுவார். செய்தித்தாள்களை விற்கும் பணியை அவருக்கு அளித்திருந்தார்கள். ஏறக்குறைய ஒரு மாதம் சென்றுவிட்டிருந்தது. அவர் ''என்னை சுகப்படுத்தினதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தார். அவர் அங்கே, ''கர்த்தர் என்னை சுகப்படுத்தினதற்காக கூடுதலான ஸ்தோத்திரம்” என்று சத்தமிட்டார். அவரைப் பார்த்து சிரித்து அவரை கேலி செய்தனர். சிறிய செய்தித்தாள் விற்கும் பையன்கள் அவரைப் பார்த்து ''உஸ்'' என்று சத்தமிட்டு பரியாசம் செய்தனர். தெருக்களில் உள்ள மக்கள், “அந்த வயதான மனிதனுக்கு மூளை குழம்பிவிட்டது'' என்றனர். அவர் ''என்னை சுகப்படுத்தினதற்காக கர்த்தருக்கு கூடுதலான, கூடுதலான ஸ்தோத்திரம், இதைப் படியுங்கள்: என்னை சுகப்படுத்தினதற்காக “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என இன்னுமாக அவர் கூறிக் கொண்டிருந்தார். 40அவரைக் கொண்டு சென்றனர் (அவரை மனநோய் காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தனர்) அங்கே அவரை கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர், ''நான் எப்போதும் இருப்பதைப் போன்றே என் மனநிலையும் சரியாக இருக்கின்றது. ஆனால் நான் தேவனை விசுவாசிக்கிறேன். என்னை சுகப்படுத்தினதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ என்று கூறிக் கொண்டிருந்தார். அதுஎன்ன? அவர் அந்த ஆறாவது புலனைப் பிடித்துக் கொண்டிருந்தார். அவருக்குள் இருந்த ஏதோ ஒன்று அதைப் பிடித்துக் கொண்டிருந்தது. அவரால் காண முடிகின்றதோ, இல்லையோ, அவர் எந்த கவனத்தையும் செலுத்தவில்லை, அந்த பார்வைக்குரிய காரியம் அதனுடன் (ஆறாவது புலனுடன் தமிழாக்கியோன்) செய்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் வேறொரு பார்வையை உடையவராய் இருந்து அதன் மூலமாக அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தேவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். நாம் பார்க்கக் கூடாதவைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லாக் கிறிஸ்தவ போர்க் கவசமும் விசுவாசத்தினால் ஆனது. தேவனிடத்தில் வருகின்ற ஒருவன் அவர் தேவன்தான் என்பதை விசுவாசிக்க வேண்டும். ஆவியின் கனிகள் ஒவ்வொன்றும், மற்ற எல்லாக் காரியங்களும், காணப்பட முடியாத விசுவாசமே ஆகும். காணக்கூடாததை, விசுவாசத்தின் மூலம் நாம் காண்கிறோம். அல்லேலூயா! 41அவர் சவரம் (ஷேவ்) செய்து கொள்ளதக்கதாக ஒரு சிறு பையன் அவரை அந்த தெருவிற்கு அப்பால் இருந்த முடித்திருத்தக் கடைக்கு கூட்டிச் சென்றான். அங்கே இருந்த முடி திருத்துபவன் ஒருவன் அவரை கிண்டல் செய்ய எண்ணினான். ஆகவே அவருடைய முகம் முழுவதும் சோப்பை தடவினான். மற்ற முடி திருத்துபவர்கள் அவனைப் பார்த்து அதைப் போன்று கண் அடித்தனர். அவன் கூறினான். அவருக்கு ஒரு பக்கத்தில் சவரம் செய்து முடித்தான்; டவலை முகம் துடைக்கும் துணியை அங்கு வைத்தான். அவன் கூறினான்: “பெரியவர் ரையான் அவர்களே'', அவர், ''ஆம் மகனே'' என்றான். ''அங்கே மேலே அந்த பரிசுத்த உருளையன் வந்த போது அவனை காண நீங்கள் சென்றீர்கள் என்று கேள்விப்பட்டேன்'' என்றான். ''ஆம், நான் சென்றேன்'', என்றார். ''நீங்கள் சுகமானதாக நான் கேள்விப்பட்டேன்'' என்று கூறினான். அதற்கு அவர், ''ஆம் நான் சுகமானேன். என்னை சுகப்படுத்தினதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ என்று கூறினார். அவ்வாறு அவர் கூறின மாத்திரத்தில் அந்த முடிதிருத்தக் கடையின் நாற்காலியிலேயே அவர் கண்கள் திறக்கப்பட்டது. தன் கழுத்தைச் சுற்றி டவல் சுற்றப்பட்ட நிலையில் அவர் நாற்காலியை விட்டு குதித்தெழுந்து ஓட ஆரம்பித்தார். சவரம் செய்பவன் தன் கையில் உள்ள கத்தியுடனே பின்னாலே கதவிற்கு நேராக ஓடினான். இந்த வயதான மனிதனாகிய ரையான் தன்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு சத்தமாக ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் என்னை சுகப்படுத்திவிட்டார்” என்று கூச்சலிட்டுக் கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் தெருவில் ஓடினார். 42அது என்ன? அந்த ஆறாவது புலனை பற்றிக் கொண்டிருத்தல். ஏதோ ஒன்று அதை உண்மையாக்கிவிடுகின்றது. ஆம் ஐயா. இந்த ஆறாவது புலனின் மூலம் இராஜ்ஜியங்கள் ஜெயிக்கப்பட்டன. ஆமென். ஆறாவது புலன் இராஜ்ஜியங்களை ஜெயம் கொள்ளச் செய்தது. இந்த ஆறாவது புலனின் மூலமாகத்தான் எரிகோவின் மதில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆறாவது புலனின் மூலமாகத்தான் எரிகோவின் மதில்கள் தரையில் விழுந்தன. இந்த ஆறாவது புலனின் மூலமாகத்தான் பவுலை கடல் விழுங்கக் கூடாதபடிக்கு ஆனது. எல்லா நம்பிக்கையும் அற்றுப் போன நிலையில் அவன் அங்கே இருந்தபோது கர்த்தருடைய தூதனை அவன் தரிசனத்தில் கண்டான். அவன் திரும்பி வந்து ''தைரியமாயிருங்கள்'' என்று கூறினான். காரணம் என்ன? இரவும் பகலுமாக பதினான்கு நாட்கள் சந்திரனோ, நட்சத்திரங்களோ, எதுவுமே இல்லாமல் மிகவுமாக இருண்டு போயிருந்தது. எப்பொழுதும் இல்லாத அளவிற்கு புயல் பயங்கரமாக இருந்தது. ஆனால் அவன் கர்த்தருடைய தூதனை அவன் கண்டபொழுது அந்த ஆறாவது புலன் கிரியை செய்ய ஆரம்பித்தது. அல்லேலூயா. அந்த ஆறாவது புலனால் பேதுருவை சிறைச் சாலையில் வைக்க இயலவில்லை. இல்லை ஐயா. தேவனுடைய வல்லமையானது ஒரு தூதனை அங்கே அனுப்பி அவனை விடுவித்தது. அந்த ஆறாவது புலனால் பவுலையும் சீலாவையும் தொழு மரத்தில் வைக்க இயலவில்லை. தேவன் பூமி அதிர்ச்சியை அனுப்பி எல்லாவற்றையும் முழுமையாக அசைத்துப் போட்டார். அந்த ஆறாவது புலன் சில நேரத்திற்கு உங்களுக்காக கிரியை செய்ய விடுங்கள். ஏனென்றால் அந்த ஆறாவது புலனின் காரணத்தால் தானியேலை சிங்கங்களாலும் கூட விழுங்க முடியவில்லை. அந்த ஆறாவது புலனிற்கெதிராக அவைகளால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. இல்லை ஐயா. அந்த ஆறாவது புலனின் காரணத்தால் நெருப்பு எபிரேயப் பிள்ளைகளை பட்சிக்கக் கூடாமல், எரிக்கக் கூடாமல் இருந்தது. மார்த்தாளுக்குள் கிரியை செய்து கொண்டிருந்த அதே ஆறாவது புலனின் மூலமாகத்தான் மரித்து நான்கு நாட்களாய் கல்லறைக்குள் கிடந்த தன் சகோதரனை இயேசு உயிரோடு எழுப்புவதைக் காண (மார்த்தாள் - தமிழாக்கியோன்) வந்தாள்... அதே ஆறாவது புலன் ஒரு குஷ்டரோகியை சுகமாக்கினது. அதே ஆறாவது புலன்தான் இயேசு கிறிஸ்துவை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பினது. அதே ஆறாவது புலன்தான் என்றாவது ஒரு நாளிலே சபையை எடுத்துக்கொண்டு, மகிமைக்குள்ளே கொண்டு செல்லும். 43அந்த ஐந்தின் மேல் (ஐம்புலன்கள் - தமிழாக்கியோன்) நம்பிக்கை வைக்காதீர்கள். அவைகள் வஞ்சிக்கின்ற தன்மை கொண்டவைகள். ஆனால் அந்த ஆறாவதானது (ஆறாவது புலன் - தமிழாக்கியோன்) சரியான ஒன்றாகும். நீங்கள் வேண்டுமானால்... இன்றிரவு ஒரு சிறிய நபர் இங்கு இருக்கின்றார். சார்லி காக்ஸ் இங்கிருக்கின்றாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவரிடம் ஆறாவது புலனைக் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் அதை ஏற்றுக் கொண்டு, அதை விசுவாசித்து ஒலி நாடாவில் அதை போட்டுப் பார்த்தார். அவருடைய மனைவியும், ''அதை நான் போட்டுப் பார்க்கட்டும்'' எனக் கூறி வேறொரு அறைக்குள் சென்று அதைப் போட்டுப் பார்த்தாள். (ஒலி நாடாவை தமிழாக்கியோன்) அவள், ''கர்த்தாவே எனக்கும் ஒரு ஆறாவது புலன் இருக்கின்றது, “அதை நான் கிரியை செய்ய விடப்போகிறேன். எனக்கு பரிசுத்த ஆவிதேவை'' என்றாள். அப்பொழுது அது வந்தது. அது என்ன? நீங்கள் அதை விசுவாசித்தால்... காணுதல்... எவ்வித காணுதலுமின்றி நாம் அதை விசுவாசிக்க வேண்டும். ஆனால் எப்படியாயினும் அதை நாம் காணும்படியாக தேவன் செய்வார். அவர் தமது சமூகத்தை நமக்குக் காண்பிக்கின்றார். அப்படியாயின் அந்த ஆறாவது புலன் கிரியை செய்யாது என்று கூற எந்த சாக்குப் போக்கும் கிடையாது. நாம் நமது தலைகளை வணங்குவோம். 44எங்கள் பரலோகப் பிதாவே, வேதத்தில் உள்ள இச்சாட்சிகள், விசுவாசம் என்று நான் அழைக்கும் அந்த ஆறாவது புலன். அந்த ஆறாவது புலனைக் குறித்து நான் எபிரேயர் 11-ல் படித்துக் கொண்டிருந்தேன். விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் இப்பூமிக்குரிய புலன்கள் அறிக்கையிடாத நிச்சயமுமாய் இருக்கிறது. அவர்கள் எவ்வாறு இராஜ்ஜியங்களை ஜெயித்தார்கள் என்றும், சிங்கங்களின் வாயை அடைத்தார்கள் என்றும், பட்டயக் கருக்குக்குத் தப்பினார்கள் என்றும் நாம் அங்கே (எபிரேயர் 11-ல் - தமிழாக்கியோன் காணலாம்). அந்த ஆறாவது புலனினால் ஏனோக்கு மறுரூபமாக்கப்பட்டு வானத்திற்கு எடுக்கப்பட்டான். ஆபிரகாம் ஒரு அந்நிய தேசத்திலே சஞ்சரித்து நூறு வயதான பிறகு ஒரு குமாரனைப் பெற்றுக் கொண்டான். ஆறாவது புலன். சாராளின் கர்ப்பப்பை செத்துப் போயிருந்த நிலையில் அவன் அக்காரியத்தைக் குறித்த அக்கறைக் கொள்ளாமல் இருந்தான். அவிசுவாசத்தினாலே தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்த நிலை தடுமாறாமல் இருந்தான். ஆனால் அவன் தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவன் ஆனான். வாக்குத்தத்தத்தை தேவன் அளித்தார் என்றும், தான் என்ன வாக்குரைத்திருக்கின்றாரோ அதை அவர் காத்துக் கொள்வார் என்றும் அவன் முழுவதுமாக ஊக்குவிக்கப்பட்டான். ஓ தேவனே, நாங்கள் ஆபிரகாமுடைய பிள்ளைகளாக இருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். எப்படிப்பட்ட ஒரு நொண்டிச் சாக்காக நாங்கள் இருக்கிறோம். ஓ, தேவனே, இன்றிரவு இச்சபையிலுள்ள இம்மக்களின் மத்தியில் உள்ள ஆறாம் புலனை எழுப்பும். நீர் ஆபிரகாமிற்கு அந்த மகத்தான அடையாளத்தை அளித்த பிறகு என்ன சம்பவித்தது என்பதை நாங்கள் காண்கையில், தேவனே, அவர்கள் கர்த்தருடைய தூதனுடைய பிரசன்னத்தை இன்றிரவு கண்டு, தங்கள் உணர்வின் மேலும், காட்சியின் மேலும் சாராமல் அந்த வாக்குத்தத்தத்தை அளித்த தேவனுடைய வார்த்தையின் மேல் சாய்ந்து கொள்ளட்டும். இங்கு இருக்கும் ஒவ்வொரு நபரும் சுகமடையட்டும், இரட்சிக்கப்படட்டும், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாதவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளட்டும். பிதாவே எனக்கு செவிகொடும், இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். 45உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ள நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? நீங்கள் எல்லாரும் உங்களுடைய ஆறாவது புலனை கிரியை செய்ய விடப்போகிறீர்களா? இப்பொழுது ஆறாவது புலன் என்றால் என்ன? அது விசுவாசம். விசுவாசம் நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (நான் மிஸெளரியிலிருந்து வருகின்றேன்; நான் அதைப் பார்க்கும்படி எனக்கு அதைக் காண்பியுங்கள் (நீங்கள் அறிவீர்கள்),'' என்ற மிஸெளரியின் தவறைப் போன்றதல்ல) விசுவாசம் இராஜ்ஜியங்களை வென்றது. நீதியானவைகளை உருவாக்கினது, ஆறாவது புலனைச் சார்ந்த எல்லா வித அற்புதங்களையும் அடையாளங்களையும் அது செய்கிறது. அதை எழுப்பிவிடு. உன் ஆவிக்குரிய கண்களில் உள்ள கட்டை பிரித்துவிடு. தேவன் இன்னுமாய் தேவனாய் இருக்கின்றாரா என்பதை சுற்றும் முற்றும் பார். அது சரி, ஜெப அட்டை உள்ளவர்கள் எல்லாரும் உங்கள் வரிசை எண் படியே என்னுடைய வலது பக்கத்திற்கு வந்து வரிசையாக நில்லுங்கள். ஜெப அட்டை எண் 1, 2, 3, 4 எழுந்து நில்லுங்கள். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, இந்த பக்கமாக வாருங்கள் (சகோ. பிரான்ஹாம் யாரோ ஒருவருடன் பேசுகிறார் - ஆசி) ஆம், அது அருமையானது. கொண்டு வாருங்கள்... உங்கள்... ஏனெனில் மக்கள் சுற்றிலும் வர ஏதுவாயிருக்கும், அது அருமையானது. உங்களுக்கு விருப்பமாயிருந்தால் அவர்களை இங்கே கொண்டு வாருங்கள். அதுசரி. 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ஆறு... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி). 46பக்திவாய்ந்த ஒரு மக்கள் குழு, சந்ததி முழுவதுமாக தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் (யூதர்கள்) மேசியா வருவதைக் குறித்தும் அவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்பதைக் குறித்தும் அவர்களுக்கு போதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் வந்தபோதோ அவரை அடையாளம் கண்டு கொள்ளத் தவறினார்கள். அது பரிதாபத்திற்குரிய ஒரு காரியமாகும். அப்படிதானே? உலகத்திலே உள்ள மிகச் சோகமான கதைகளில் அதுவும் ஒன்றாகும் என்று நான் நினைக்கிறேன். உலகம் அவராலே உண்டாக்கப்பட்டது ஆனால் உலகமானது அவரை அறியவில்லை. தமக்கு சொந்தமானவர்களிடத்தில் வந்தார்; ஆனால் அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. நிச்சயமாகவே அது ஒரு சோகத்திற்குரிய எண்ணமாகும். இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் ஒரு மேசியாவிற்காக காத்துக் கொண்டிருந்தனர். அது சரிதானே? அந்த மேசியா வரும்போது தேவனாகவும் தீர்க்கதரியாகவும் இருப்பார். எத்தனைப் பேர் அதை அறிவீர்கள்? அவர் ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தைச் செய்ய வேண்டியவராக இருந்தார். ஏனென்றால் அவர் மாம்சத்தில் வெளிப்படும் போது ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று மோசே கூறியிருந்தான். அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்து தீர்க்கதரியின் அடையாளத்தைச் செய்ய வேண்டும். யூதர்கள் இப்பொழுது உள்ளதைப் போன்று. நான் காத்துக் கொண்டிருக்கிறேன்... 47சகோதரன் ஜோசப்பும் நானும் இன்று மத்திய வேளையில் பேசிக் கொண்டிருந்தோம். சகோதரன் ஸ்டாக்ஹோம், ஸ்வீடன். சகோ. லூவி பெத்ரூஸ். சுமார் 5 இலட்சம் வேதாகமங்களை அங்கே அனுப்பி வைத்தார். சகோ. ஆர்கன்பிரைட் “நள்ளிரவிற்கு மூன்று நிமிடங்கள்'' என்று படக் காட்சியை எனக்கு காண்பித்தபோது, ஈரான் மற்றும் உலகெங்கிலும் இருந்த யூதர்கள் அங்கே வந்து கொண்டிருந்தனர். இயேசுவின் நாமத்தை அவர்கள் கேள்விப்படவேயில்லை. ரோம சிறையிருப்பு முதற்கொண்டு அவர்கள் அங்கு இருந்து வந்தனர். இயேசு கிறிஸ்து என்கின்ற காரியத்தைக் குறித்து அவர்கள் கேள்விப்படவே இல்லை. சகோ. பெத்ரூஸ் இந்த வேதாகமங்களை அங்கே அனுப்பி வைத்தார். அவர்கள் அதைப் படித்துக் கொண்டிருந்தனர். ஆகவே அவர்களுடன் ஒரு நேர்காணலை (Interview) வைத்தனர். சரியாக... அந்த படத்தை நான் வைத்துள்ளேன். அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம், “நீங்கள் ஏன் உங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பி வருகிறீர்கள், மரிப்பதற்காகவா?'' என்று கேட்கப்பட்டது. எல்லாவற்றையும் சுற்றி வைத்துக் கொண்டு தங்கள் முதுகின் மீது சுமந்தவர்களாய்... ''நாங்கள் மேசியாவைக் காண வந்துள்ளோம்'' என்றனர். ஆம் ஐயா. 48அத்திமரம் துளிர்விடும் போது வசந்த காலம் சமீபமாயிருக்கிறது அந்த ஆறு முனையைக் கொண்ட தாவீதின் நட்சத்திரம் இப்பொழுது ஒரு தேசமாக இருக்கின்றது. உலகத்திலேயே மிகவும் பழமையான கொடி இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்கள் கழித்து இப்பொழுது முதன் முறையாக பறக்கின்றது. அது சரி. எருசலேமிற்கு அதன் சொந்த நாணயம், பணம், ரூபாய் நோட்டுகள், சட்டங்கள், அரசாங்கம் இருக்கின்றது. அது மறுபடியும் ஒரு தேசமாயிருக்கிறது. இயேசு, அத்தி மரம் துளிர்விடத் துவங்கும் போது, காலமானது சமீபமாயிருக்கிறது என்று கூறினார். அவர்கள் இந்த வேதாகமங்களைக் கண்டபோது... இந்த நம்முடைய வால் தெருவில் (Wall Street) உள்ள யூதர்களைப் போல் அவர்கள் இல்லை. அவர்கள் அங்கே விசுவாசித்துக் கொண்டிருந்தனர். அவர்களை விமானத்தின் மூலம் கொண்டு செல்ல வந்தபோது, அவர்கள் அந்த விமானத்தில் ஏற மறுத்தனர். அவர்கள் அதைக் குறித்து பயந்தனர். எதையுமே அவர்கள் கண்டிருக்கவில்லை. லுக் பத்திரிக்கையில் (Look) நீங்கள் அதைக் கண்டீர்கள். அந்த வயதான யூத ரபி வெளியே வந்து, ''நினைவில் கொள்ளுங்கள் - நாங்கள் எங்கள் தாய் நாட்டிற்கு அழைக்கப்படும்போது, நாங்கள் கழுகின் செட்டைகளில் சுமந்து செல்லப்படுவோம் என்று தீர்க்கதரிசி கூறியிருக்கின்றார்“ அல்லேலூயா! கவனியுங்கள். ”நாங்கள் கழுகின் செட்டைகளின் மேல் சுமந்து செல்லப்படுவோம்'' அங்கே அவர்கள் தங்கள் தாய்நாட்டில் இருந்தனர். அங்கே அவர்கள் மறுபடியுமாக திரும்ப வருகின்றனர், அவர்கள் இந்த சிறிய வேதாகமத்தை, புதிய ஏற்பாட்டை படிக்க ஆரம்பித்தனர். யூதர்கள் எப்பொழுதும் பின்னிருந்து முன்பக்கம் வரை படிப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா. இந்நாட்களில் அவர்கள் எங்கிருக்கிறார்கள், எந்நிலையில் இருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு காண்பிக்கிறேன். அவர்கள் படித்தபோது இந்த இயேசு மேசியாவானால்... ''இந்த இயேசு மேசியாவாயிருந்தால், அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார். அவர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார் என்றால், அவர் தீர்க்கதரிசியின் அடையாளத்தைச் செய்வதை நாங்கள் காணட்டும், அப்பொழுது நாங்கள் அவரை விசுவாசிப்போம்“ என்றனர். ஆமென், ஓ, என்னே. அது சரி! புறஜாதிகளாகிய நீங்கள் ஆயத்தமானால் நலமாயிருக்கும். தேவன் தம்முடைய கிருபையை யூதர்கள் பக்கமாக திருப்பும் காலம் சமீபமாயிருக்கிறது. ஆகவே புறஜாதிகளாகிய நீங்கள் தேவனில்லாமல், இரக்கமில்லாமல் முத்தரிக்கப்படுவீர்கள், வேறொன்றுமில்லை, அணுகுண்டிற்கு இரையாவீர்கள். ஆகவே உங்களுக்கு சமயம் வாய்க்கும் போதே தேவனுடன் உங்களை நேராக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுதே தேவனுடன் உங்களை சரியாக்கிக் கொள்ளுங்கள், 49கவனியுங்கள். இயேசு யூதர்களிடம் வந்தபோது, அந்த மேசியாவின் அடையாளங்களைச் செய்து அவர் தாம் ஒரு தீர்க்கதரிசி என்பதை அவர்களுக்கு காண்பித்தார். ஆனால் அவர்கள் அவரை குறி சொல்பவர் என்றும், பெயல்செபூல் என்றும், ஒரு பிசாசு என்றும் அழைத்தனர். அதன் பிறகு அது... மேசியாவை எதிர்நோக்கி இருந்த இன்னும் சில மக்கள் அங்கே இருந்தனர். வேதத்தின்படி பூமியில் மக்கள் சந்ததியினர் மூன்று தான் என்பதை எத்தனைப் பேர் அறிவீர்கள்? காம், சேம்,யாபேத்தினுடைய ஜனங்கள் ஆவர். அவர்கள் எல்லோரும் நோவாவிலிருந்து வந்த அவனுடைய குமாரர்கள். அது சரி. அது சரி. அது யூதர், புறஜாதி, சமாரியன் (அவன் பாதி யூதன், பாதி புறஜாதி ஆவான்) ஆகவே இந்த சமாரியர்கள் மேசியா வருவதற்காக காத்துக் கொண்டிருந்தனர். 50இயேசு அங்கே வாசலருகே சென்று அங்கே உட்கார்ந்தார். ஒரு ஸ்திரீ வெளியே வந்தாள். அவர் அவளிடம், “தாகத்துக்குத் தா'' என்றார். அவள், “யூதர்களாகிய உங்களுக்கு அவ்விதமான பழக்க வழக்கம் இல்லையே. நாங்கள் ஒருவரோடு ஒருவர் எவ்வித சம்பந்தமும் கலவாதவர்கள் ஆயிற்றே”, என்றாள். அவர் “நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை நீ அறிவாயானால் நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய்'' என்றார். இப்படியாக சம்பாஷணை தொடர்ந்து கொண்டேயிருந்தது. கடைசியாக, ”நீ போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு வா'' என்றார். அதற்கு அவள், ''எனக்குப் புருஷன் இல்லை'' என்றாள். அவர் “நீ சொன்னது சரிதான், எப்படியெனில் ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல'' என்றார். அவள் கூறினாள், “ஐயா... அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருக்கின்ற மூன்றில் இரண்டு பிரசங்கிகளை விட அந்த வேசி தேவனைக் குறித்து அதிகம் அறிந்திருந்தாள். அது சரி. அவள் கூறினாள். ''ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். சமாரியர்களாகிய நாங்கள் மேசியா வரும்போது, அடையாளங்களைச் செய்வார் என்றும், அவர் வரும்போது எல்லாவற்றையும் எங்களுக்கு அறிவிப்பாரென்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால்,”நீர் யார்?'' அதற்கு இயேசு, ''உன்னுடனே பேசுகிற நானே அவர்'' என்றார். அவள் ஊருக்குள்ளே ஓடி, “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள், அவர் அதே மேசியாதான் அல்லவா?'' என்று கூறினாள். உங்களுக்கு புரிகின்றதா? அதே மேசியாதான் அல்லவா? அது சரி. 51இப்பொழுது, அவர் அந்த அடையாளத்தை அந்த யூதர் முன்பாகக் காண்பித்தார். அந்த சமாரிய ஸ்திரீக்கு முன்பாக அதைச் செய்தார். ஆனால் புறஜாதிகளுக்கு முன்பாக அல்ல. நாம் நம்முடைய முதுகின் மேல் கட்டைகளை வைத்துக் கொண்டிருந்த ஆங்கிலோ - சாக்ஸன்கள் (Anglo-Saxon), விக்கிரக ஆராதனைக்காரர், ரோமர்கள் இன்னுமாக மற்றவைகள். அவர் அந்த அடையாளத்தை அவர்களுக்கு (புறஜாதிகளுக்கு - தமிழாக்கியோன்) ஒருபோதும் காண்பிக்கவில்லை. அவர் கூறினார். ''இந்த பொல்லாங்கும் விபச்சாரம் நிறைந்த சந்ததி உயிர்த்தெழுதலின் அடையாளமாகிய யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தை பெறும்'' என்று. இப்பொழுது இயேசுவும் அவர்களிடம் கூறினார், “சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷக் குமாரன் வெளிப்படும் நாட்களிலும் நடக்கும்''. எவ்விதமான அடையாளத்தை சோதோம் பெற்றது? அதே காரியம், தம் முதுகை திருப்பிக் கொண்டிருந்த தூதன். (மக்களாகிய நீங்கள் எல்லாரும் தயாராக இருக்கிறீர்களா, பில்லி? எல்லோரும்? ”அது சரி'') அவர் கூறினார். 52இங்கே ஜெப அட்டை இல்லாதிருந்து, தேவன் உங்களை சுகமாக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் எத்தனைப் பேர், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ''தேவன் என்னை சுகப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். இப்பொழுது ஜெப அட்டை உள்ள வேறு நபர்கள் வரிசையில் நில்லுங்கள். இப்பொழுது, இல்லையென்றால் ஏன் நீங்கள்... உங்களை எப்படியாயினும் நாங்கள் பிடித்துவிடுவோம். நீங்கள்... அந்த ஆறாவது புலனைக் குறித்து இன்றிரவு நான் கூறினதை மாத்திரம் நீங்கள் எற்றுக் கொள்வீர்களானால்... உங்கள் முழு இருதயத்துடன் இதை விசுவாசியுங்கள். இப்பொழுது உங்களில் அநேகர் இங்கே கைக்குட்டைகளை அனுப்பியுள்ளீர்கள். என்னால் இயன்றவரை ஒவ்வொன்றிற்காகவும் நான் ஜெபிக்கின்றேன். உங்களுக்குரியதை நான் தவற விட்டுவிட நேர்ந்தால், ஜெபர்ஸன்வில், இன்டியானாவிற்கு கடிதம் எழுதுங்கள். நான் உங்களுக்கு ஒன்றை அனுப்பி வைப்பேன். பாருங்கள்? தபாலின் மூலம் உங்களுக்கு நான் அனுப்புவேன். உங்கள் கைக்குட்டையை நீங்கள் தவற விட்டீர்களானால், அல்லது தொலைந்து போனால், எனக்கு எழுதுங்கள். அதில் உங்களுக்கு ஒரு செலவும் இல்லை. எனக்கு எழுதுங்கள். நாங்கள் ஏனென்றால் மக்கள் சில சமயங்களில் ஒரு சிறு தொகையையும் அதனுடன் அனுப்புகிறார்கள். தபால் தலைகளுக்காகவும் (Stamps) மற்ற காரியங்களுக்காகவும் வாரத்திற்கு நூற்றுக்கணக்கான டாலர்களை நாங்கள் செலவு செய்து, உலகெங்கிலும் இந்த கைக்குட்டைகளை அனுப்புகிறோம். அற்புதங்களுடனும் அடையாளங்களுடனும் அவை திரும்பி வருகின்றன. ஏனென்றால் நான் அடைவதை விட அது அதிகமாக அடைகின்றது. ஆனால் இப்பொழுது பாருங்கள்... 53நான் யூகிக்கின்றேன். 95 சதவீகித மக்கள்... இங்கே ஜெபர்ஸன்வில்லில் எனக்கு சில மக்கள் உள்ளனர் என்று எனக்குத் தெரியும். ஆனால் ஜெப வரிசையில் அவர்களில் ஒருவரைக் கூட நான் காணவில்லை. அப்படி நான் பார்ப்பேனானால் அவர்கள் சென்று விட வேண்டும் என்று அன்புடன் கூறுவேன் (அது சரி). ஏனென்றால் அவர்களின் வீட்டிற்கு சென்று நான் அவர்களை சந்திக்க முடியும். இது வேறே சமயம் கிடைக்காத மக்களுக்காகும். இங்கே மேலே இருக்கும் மக்களுக்கு. இங்கே ஒரு ஸ்திரீ நிற்கின்றாள். அந்த ஸ்திரீயை சுகமாக்கும் தன்மை இருந்து அவ்வாறே நான் செய்யாதிருப்பேனானால், நான் ஒரு கயவனாக இருப்பேன். சகோ. சல்லிவன், என்னால் அவளை சுகமாக்கக் கூடும் என்றால் இந்த பிரசங்கப் பீடத்தின் பின்னால் நிற்பதற்குக் கூட நான் தகுதியற்றவன். அவள் வியாதியாயிருப்பாளானால் அவள் ஏற்கனவே குணமாகிவிட்டாள். அவள் வியாதிப்பட்டிருக்கிறாளா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவள் வியாதியாயிருந்தால், இயேசு கல்வாரியில் மரித்தபோதே அவளை சுகப்படுத்திவிட்டார். அதற்குரிய நிரந்தரமான தீர்வை அவர் செலுத்திவிட்டார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம். அது சரியா? 54இப்பொழுது, சக்கர நாற்காலிகளில் இங்கே மேலே கொண்டு வரப்பட்டுள்ள மக்களே, நீங்கள் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடந்த இரவு சக்கர நாற்காலியிலேயோ அல்லது கட்டிலிலேயோ ஒரு ஸ்திரீ இருந்தாள் என்று நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் அவளை அழைத்து அதை (வியாதியை - தமிழாக்கியோன்) அவளிடத்திலிருந்து எடுத்துப் போட்டார். இப்பொழுது சக்கர நாற்காலியில் உள்ள நீங்கள் அநேக சமயங்களில், “ஓ, என்னுடைய காரியம் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளது” என்று நீங்கள் கூற ஆரம்பிக்கலாம். அவ்வாறு நீங்கள் எவ்வளவு காலமாக எண்ணுகிறீர்களோ, உங்கள் ஆறாவது புலன் அவ்வளவு காலம் மரித்த நிலையில் இருக்கும். உங்களது ஆறாவது புலன் இன்றிரவு உயிரோடிருக்குமானால், இதுவே உங்கள் வேதனையின் கடைசி மணி நேரமாகும். நீங்கள் அதினின்று வெளியே வருகிறீர்கள். வீட்டிற்கு சென்று சுகமாயிருங்கள். இங்கு தங்கள் சிறு பையனுடன் நின்று கொண்டிருக்கும் அந்த மனிதனும் ஸ்திரீயும் (கறுப்பு நிற சகோதரனும் சகோதரியும்) நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என் சகோதரனே, விசுவாசம் கொள், சகோதரியே விசுவாசம் கொள். இந்த பையன் விசுவாசத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்கு மிகவும் சிறியவனாக இருக்கின்றான்; தேவன் உங்கள் குழந்தையை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? இங்கு சிறு பையனை வைத்திருக்கும், இங்கு நின்று கொண்டிருக்கும் ஸ்திரீ, நீங்கள் விசுவாசம் கொள்ளுங்கள். இந்த சக்கர நாற்காலிகளைச் சுற்றி நிற்கும் மக்களாகிய நீங்கள், இந்த மக்களுக்காக நீங்கள் விசுவாசம் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அங்கே உங்களில் சிலர் இருதயக் கோளாறு உள்ளவர்களாய் இருக்கிறீர்கள். இன்னும் சில நாட்களில் மரிக்கப் போகிறீர்கள். புற்று நோய்... ஏதாவது ஒன்று செய்யப்படவில்லையெனில் நீங்கள் மரித்துப் போவீர்கள். இந்த மக்கள் தங்கள் சாதாரண வாழ் நாளை ஊனமுற்றவர்களாக கழிக்க நேரிடும். நீங்கள் இப்பொழுதே தேவனைப் பற்றிக் கொள்ளவில்லையெனில் நீங்கள் மரிக்கப் போகின்றீர்கள். ஆம் ஐயா. ஆனால் நீங்கள் தேவனைப் பற்றிக் கொண்டு, “தேவனே, நான் என் ஆறாவது புலனை உபயோகப்படுத்தப் போகிறேன்; நான் விசுவாசிக்கிறேன். நீர் என்னை சுகமாக்கப் போகிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்று கூறுங்கள். அப்பொழுது தேவன் அதைச் செய்வார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன். 55இப்பொழுது, நான் இந்த வரிசைக்கு பகுத்தறியுதலை உபயோகப்படுத்தப் போவதில்லை... இங்கே ஐம்பது பேருக்கும் முழுமையாக என்னால் கவனம் செலுத்த இயலாது. என்னால் அதை செய்ய இயலாது. ஆனால் நான் ஜெபிக்கக்போகிறேன். இப்பொழுது, தேவன் இன்னுமாய் தேவனாய் இருப்பாரானால், அவரால் எல்லாக் காரியங்களையும் செய்ய முடியும் அவர்... எது உன்னதமான விசுவாசம்? அங்கே ஒரு ரோமன் இருந்தான்... ஒரு யூதன் வந்து, ''நீர் வந்து என் குமாரத்தியின் மீது கைகளை வையும்; அவள் சொஸ்தமாவாள்'' என்றான். அந்த ரோமன், ''நான் தகுதியில்லாதவன், வார்த்தையை மாத்திரம் சொல்லும்'' என்றான். அதைத்தான் புறஜாதிகள் செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றனர். கடல் கடந்த தேசங்களிலும், மற்ற இடங்களிலும், ஒரு இயற்கைக்கு மேம்பட்ட காட்சி நடப்பதை அவர்கள் காண்பார்களானால், அந்த முழு கூட்டமே விசுவாசத்துடன் திரும்பிச் செல்வார்கள். பாருங்கள்? அவர்கள் அதை விசுவாசிப்பார்கள். ஆனால் இங்கேயோ அது கடினமான ஒரு காரியமாக இருக்கின்றது. இப்பொழுது நீங்கள் பெந்தெகோஸ்தே மக்கள் ஆவர். நீங்கள் மேத்தோடிஸ்டாக இருக்கலாம். ஆனால் பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றிருந்தால் நீங்கள் பெந்தெகோஸ்தேயினர். இப்பொழுது அந்த ஆறாவது புலனை உயிரடையச் செய்யும்படிக்கு நீங்கள் தயாராயிருப்பீர்களானால், அதை நாம் செய்வோம். 56இப்பொழுது இங்கிருக்கும் இந்த ஸ்திரீ, அல்லது இவர்கள், எப்படியாயினும், நான் அந்த ஸ்திரீயை அறியேன். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர் என்று நான் யூகிக்கின்றேன். இப்பொழுது, இங்கிருக்கின்ற இந்த ஸ்திரீயை என் வாழ்நாளிலே நான் கண்டதேயில்லை. என்னை அவளுக்கு தெரியாது என்று கூறியிருக்கிறாள். அவளையும் எனக்குத் தெரியாது. நல்லது, எப்படி எனக்குத் தெரியும்... அவள் கீழே சென்று. இந்த குலுக்கப்பட்ட அட்டைகளை யாரோ விநியோகித்துள்ளனர். அவள் அதை எடுத்து இங்கே வந்திருக்கிறாள். இங்கே மேடையின் மேல் முதல் நபராக வந்திருக்கிறாள். நான் இங்கே இவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளியே உள்ளவர்களாகிய நீங்கள் அதே நேரத்தில், உங்களில் சிலர் அதை விசுவாசிக்கிறீர்கள். பாருங்கள். அவர் அங்கே உங்களிடம் வெளியே வரவில்லை என்றாலும் உங்களுக்கும் அதே பங்கைத் தான் அவர் அளிக்கிறார். பாருங்கள்? இப்பொழுது, கூட்டத்தில் இல்லாத ஒரு நபருக்கு ஏற்கனவே ஒருமுறை அது செய்யப்பட்டிருக்கலாம். அது உண்மையே என்று உறுதிப்படுத்தப்படும் ஒரு காரியமாக இருக்கும். தேவன் மோசேயிடம், ''இந்த வரத்தை எடுத்து, அங்கே சென்று உன்னுடைய கைகள் வெண் குஷ்டத்திலிருந்து சுகமாகிறது என்பதைக் காண்பி'' என்றார். அவன் அதை ஒருமுறை செய்தான், முழு இஸ்ரவேலரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி, அவனைப் பின் தொடர்ந்தனர். பாருங்கள்? அவன் ஒவ்வொரு இஸ்ரவேலரையும் சந்தித்து, ''இங்கே வெண்குஷ்டம் உடைய என்னுடைய கையைப் பார்? அது சுகமாகிவிட்டது'' என்று அவன் கூறவில்லை. இல்லை. இல்லை. அவன் அதை ஒருமுறை செய்தான். அவர்கள் எல்லோரும் அதை விசுவாசித்தனர். அவ்விதமாகத்தான் நாம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். அதைப் பாருங்கள். அதை விசுவாசியுங்கள். 57இப்பொழுது, என்னுடைய கை இங்கே உள்ளது. எனக்குத் தெரிந்தவரை, என் வாழ்நாளிலே இந்த ஸ்திரீயை நான் கண்டதேயில்லை. முற்றிலுமாக இவள், எனக்கு ஒரு அந்நிய ஸ்திரீயாய் இருக்கிறாள். இவள் எதற்காக இங்கே நிற்கிறாள் என்றும், இவள் செய்த ஏதோ ஒரு காரியத்திற்காகவோ அல்லது செய்ய விழைகின்ற, அல்லது திட்டமிடுகிற அல்லது ஏதோ ஒன்று. இவை எனக்குத் தெரியாது என்பதை இவள் அறிவாள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்னிடம் வந்து இவள் நிற்கின்ற காரணம் என்னவென்பதை எனக்குக் கூறுவாரானால், கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயிடம் பேசின அதே இயேசு, இன்னுமாக அதே போன்றுதான் இருக்கிறார் என்ற உறுதிப்படுத்தலாக அது அமையும். அது அக்கினி ஸ்தம்பத்திலும், பிதாத்துவத்தில் குமாரத் துவத்தில் குமாரன் என்று அழைக்கப்பட்ட மாம்ச சரீரத்தில் வாசம் செய்து, இப்பொழுது பரிசுத்த ஆவியாக உன்னிலும் என்னிலும் இருந்து, பரிசுத்தமாக்கப்படுதல் மூலமாகவும், இரத்தத்தின் மூலமாகவும் நம் சரீரத்தில் வாசம் செய்கிற அதே மேசியா தான் என்று இந்த புறஜாதி சந்ததியினருக்கு அது உறுதிபடுத்தும். பரிசுத்த ஆவி நம்மில் வாசம் செய்கிறார். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறோன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்'' நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 58இப்பொழுது, சக்கர நாற்காலியில் உள்ளவர்களுக்கு இதை நான் கேட்க விரும்புகிறேன். இப்பொழுதே இந்த ஸ்திரீயை என்னால் சுகமாக்கக் கூடுமானால், அதை நான் செய்வேன். என்னால் உங்களை சுகமாக்க இயலும் என்றால், அதை செய்வேன். ஆனால் கர்த்தராகிய தேவன் (அவள் எனக்கு நெருங்கி இருக்கிறாள்). அந்த ஸ்திரீயைக் குறித்து ஏதாவதொன்றை என்னிடம் கூறுவார் என்றால் (அது சரியா தவறா என்பதைக் குறித்த அவளே தீர்ப்பளிக்கட்டும்) எனக்கு அதைக் குறித்து தெரியாது என்பதை அவள் அறிவாள். அதைச் செய்ய வேண்டும் என்றால் ஒரு இயற்கைக்கு மேம்பட்ட காரியம் தான் சம்பவிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்களா? அது சரியல்லவா? அவர் என்ன செய்யப் போகிறார் என்று வாக்குரைத்தவாறு அது தேவனுடைய குமாரன் என்று நீ விசுவாசிப்பாயா? அதை இங்கே முழுமையாக விசுவாசிப்பாயா? நீ உன் சுகத்தைப் பெற்றுக் கொள். உன் முழு இருதயத்துடன் அதை விசுவாசி. இந்த நிகழ்ச்சி மாத்திரம் அந்த எல்லாவற்றிற்கும் ஒரு பதிலாயிருக்கும். நீங்கள் அவ்வாறு எண்ணுவீர்களானால். ஆமென். அது முற்றிலும் உண்மையாகும். நீங்கள் அந்த ஒரு நிகழ்ச்சியை விசுவாசித்தீர்களானால், அது நிச்சயமாக உண்மையானதாக இருக்கும். அப்படியானால் சரி, இப்பொழுது, நான் இந்த ஒலிபெருக்கியின் முன் நிற்கப் போகிறேன். ஏனெனில் தரிசனம் நேரிடுகையில் நான் உரத்த சத்தமாக பேசுகிறேனா அல்லது சத்தமில்லாமல் மெதுவாக பேசுகிறேனா என்று என்னால் அறிந்து கொள்ள இயலாது. நீங்கள் அறிந்ததை நான் அறியாமல் இருப்பதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினால் அவர்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்வார்கள் என்று நான் நிச்சயித்துக் கூறுகின்ற ஒரு கூட்ட மக்கள் எனக்கு உண்டு. இப்பொழுது அதை அவர் உனக்கு செய்தாரானால் அது உனக்கு விசுவாசத்தை அளித்து அது உன்னை ஊக்கப்படுத்தும் அல்லவா? அப்படித் தானே? - நிச்சயமாக அது செய்யும். 59இப்பொழுது நம்முடைய கர்த்தர் கிணற்றண்டை இருந்த அந்த ஸ்திரீயிடம் பேசினது போல நான் உன்னிடம் பேசுகின்றேன். பாருங்கள்? முதலாவதாக அவளுடைய கவனத்தை ஈர்த்தார். ஏனெனில் முதலாவதாக இருந்தவள் அவள் தான் (பாருங்கள்?) ஆகவே அவ்வாறே தான் நான் செய்ய வேண்டும் அதை பாருங்கள்? நீங்கள் ஒரு மானிட இனம். உங்களுக்கு ஆவி, ஆத்துமா இருக்கின்றது. நானும் ஒரு மானிடன். எனக்கும் ஆவி, ஆத்துமா உண்டு. நீங்கள் ஒரு கிறிஸ்தவள் என்று நான் இப்பொழுது அறிந்து கொண்டேன். ஏனென்றால் உங்கள் ஆவி நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று எனக்கு சாட்சி கொடுக்க ஆரம்பித்துள்ளது. அது சரி. அது ஆயத்த நிலையில் உள்ளது. நீங்கள் முயலவில்லையாயினும் அது உங்களை தள்ளிக் கொண்டு இருக்கும். நீங்கள் ஏதாவது ஒரு கூட்டத்தில் பங்கு பெற்று நடந்தவைகளை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? நடந்தவைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா. பாவிகள் வருவதையும் அது எப்படி அவர்களை உந்தித் தள்ளுகிறது என்பதையும் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா. அது இப்பொழுது அவர்களிடம், “நீங்கள் பாவிகள்” என்று கூறும். நீங்கள் இந்த - இந்த காரியங்களைச் செய்தீர்கள். “நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்தீர்'' பாருங்கள்? 60இப்பொழுது, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், உங்களில் உள்ள எல்லாவற்றோடும் நீங்கள் விசுவாசிப்பீர்களானால், உங்கள் பிரச்சனையைக் குறித்தோ அல்லது வேறெதாவதைக் குறித்தோ தேவன் என்னிடம் கூற இயலும். அப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள். அது மற்ற எல்லோரும் அதை விசுவாசிக்கச் செய்யும். இந்த முடமான மக்கள் விசுவாசிப்பதாகக் கூறியுள்ளனர். வியாதியுள்ள மக்கள், இருதயக்கோளாறு உள்ளவர்கள், மற்ற காரியங்கள் உள்ளவர்கள் விசுவாசிப்பதாகக் கூறியுள்ளனர். ஆகவே எல்லோரும் விசுவாசியுங்கள், கீழே உள்ள முழுவரிசையும் விசுவாசிக்கும். ஜெப வரிசையை முழுமையாக கொண்டு வருவதனால் எவ்வித பிரயோஜனமும் இல்லை. உண்மையாக எல்லோரும் அந்த ஆறாவது புலனை உபயோகப்படுத்த விரும்புகின்றனர், “கர்த்தருக்கு நன்றி அவர் என்னை சுகமாக்குகிறார்'' என்று கூற ஆரம்பியுங்கள். ஒவ்வொருவரிடமும் அவர் கொண்டுள்ள நோக்கம் அதுவேயாகும். இங்கே இழுக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவராக நீங்கள் இருக்கிறீர்கள். அங்கே அநேகம் அநேகம் பேர்கள் உள்ளனர். ஒருவேளை பரிசுத்த ஆவியானவர் இந்த முழு கூட்டத்தின் மேலும் செல்லலாம். அவர் என்ன செய்வார் என்று எனக்கு தெரியாது. நான் மிகவுமாக பலவீனமடையும்போது என்னுடைய மகன், அல்லது ஜீன், அல்லது வேறே யாராவது ஒருவர் என் பக்கத்தில் வந்து பிடித்துக் கொள்ளவேண்டும். நான்... அப்பொழுது நான் சென்றாக வேண்டும் (பாருங்கள்?) ஏனென்றால், என்னால்... அநேக தரிசனங்கள் வரும்போது சில சமயங்கள் நாம் எங்கிருக்கிறோம் என்பதை அறியமாட்டோம். பாருங்கள்? இயேசு ''நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், இவைகளைப் பார்க்கிலும் அதிகமானவைகளைச் செய்வீர்கள்'' என்றார். அவர் பார்த்த காரியங்கள். 61இப்பொழுது, இந்த ஸ்திரீயைக் குறித்த காரியம் என்னவென்பதை நான் காண்கிறேன். அவள் ஜெபத்திற்காக வந்திருக்கிறாள், ஜெபமானது கையிலுள்ள ஒரு கட்டிக்காக, ஒரு சதை வளர்ச்சிக்காக தேவையாயுள்ளது. அது சரி, அப்படித்தானே. இப்பொழுது, அதை நீ விசுவாசிக்கின்றாயா? இப்பொழுது, அந்த சதை வளர்ச்சி எனக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தேவனிடத்திலிருந்து அல்ல. அது எந்தக் கையில் உள்ளது என்பதை நான் கூறட்டுமா? வலதுகையில். அது சரியா? அது உண்மை என்றால் நீ உன் கைகளை உயர்த்து. இப்பொழுது, இதை உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, அந்த ஆறாவது புலன் ஏதோ ஒன்றை உங்களுக்கு செய்கின்றதல்லவா? நீங்கள் குருடாயிருந்து “நல்லது, அது அருமையாயிருக்கிறது'' என்று கூறுகிறீர்களா. பாருங்கள்? அல்லது அந்த ஆறாவது புலன் உண்மையாக கிரியை செய்து, ''தேவனுக்கு ஸ்தோத்திரம், அந்த ஸ்திரீயை அந்த மனிதனுக்கு தெரியாது. இப்பொழுது, இயேசுகிறிஸ்து மாத்திரமே அவளை அறிவார். அவர் அதைச் செய்வதாக வாக்குரைத்திருக்கிறார்'' என்று நீங்கள் கூறுவீர்களானால், நீங்கள் அதை விசுவாசித்தால் நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று அர்த்தம். 62“ஒருக்கால், அவளுக்கு என்ன இருந்தது என்பதை நீங்கள் யூகித்திருக்கலாம்” என்று நீங்கள் கூறலாம். என்னால் அதை யூகிக்க முடியாது. அதைக் குறித்து யூகம் என்பதே கிடையாது. ஒருவேளை... நான் வேறொரு காரியத்தை உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவள் அல்ல. நீங்கள் லிமாவிலிருந்து வருகிறீர்கள். அது சரி. நீங்கள் யார் என்பதை தேவன் என்னிடம் கூறுவார் என்று விசுவாசிக்கிறீரா? செல்வி. வைட், திருமதி. வைட். அது உண்மை. தேவன் இப்பொழுது உம்மை குணமாக்குவார். முழு இருதயத்தோடும் விசுவாசித்து வீட்டிற்கு செல்லுங்கள். இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசிக்கிறீர்களா? தேவனிடத்தில் விசுவாசம் கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசித்தால், விசுவாசிப்பவர்களுக்கு எல்லாம் கூடும். நீங்கள் விசுவாசித்தால், அல்லது நீங்கள் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது நீங்கள் சுகமானீர்கள் என்று நான் கூறுவேனானால் என்னை விசுவாசிப்பீர்களா? அப்படியானால் உங்கள் வழியிலே செல்லுங்கள், ஏனெனில் நீங்கள் சுகமாக்கப்பட்டீர்கள். தேவனிடத்தில் விசுவாசம் கொள்ளுங்கள். இப்பொழுது, உன் மீது கரங்களை வைத்து “சாத்தானே இந்த பையனை விட்டு நீங்கு'' என்பேனானால் நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் சுகமாவீர்களா? இங்கே வா. சாத்தானே இந்த பையனை விட்டுப்போ. இயேசுவின் நாமத்திலே. ஆமென். விசுவாசித்துக் கொண்டே செல். விசுவாசம் கொள். இப்பொழுது உங்கள் மீது கரங்களை வைத்து ''சாத்தானே இவரை விட்டு அப்புறம் போ'' என்று நான் கூறுவேனானால் நீங்கள் விசுவாசிப்பீர்களா? சாத்தானே இயேசுவின் நாமத்திலே இவரை விட்டு அப்புறம் போ. ஆமென். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக, விசுவாசித்துக் கொண்டே செல்லுங்கள். 63உங்களுக்கு என்ன கோளாறு என்று நான் கூறுவேனானால் அது உங்களுக்கு உதவியாயிருக்குமா அல்லது உங்கள் மீது கரங்களை வைத்தல் போதுமானதா? எது, உங்களுக்குள்ள கோளாறைக் கூற வேண்டுமா? அது உங்கள் முதுகில் இருக்கின்றது. அது சரி. அது சரியல்லவா? அப்படியானால் இயேசுவின் நாமத்தில் சுகமடைந்து விடு செல்லுங்கள். அது சரி. இப்பொழுது ஏதாவதொன்றை நான் கூறி உங்கள் மீது கரங்களை வைத்தால் அது உங்களை சுகப்படுத்தக் கூடுமா? இங்கே வாருங்கள். இயேசுவின் நாமத்திலே இவள் சுகமடைவாளாக. ஆமென். விசுவாசியுங்கள். அது சரி. உங்களைக் குறித்தென்ன? உங்களை அறிவேன் என்று நான் நம்புகிறேன். அது சரி. உங்கள் மீது கரங்களை வைத்துக் கூறுகிறேன். ''சாத்தானே இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே என் சகோதரனை விட்டுச் செல். ஆமென்'' சகோதரனே இப்பொழுது உங்கள் முழு இருதயத்துடனே விசுவாசித்துக் கொண்டே செல்லுங்கள். 64எல்லோரும் விசுவாசிக்கிறீர்களா? நல்லது, கேளுங்கள், இதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர் வந்து இந்த காரியங்களை வெளிப்படுத்தும்போது ஏன் அது... மக்களிடையே என்ன தவறு உள்ளது என்பதை என்னிடம் கூறுகின்றார். நான் ஒரு நிமிடம் நிறுத்துவேனானால். மற்றவர்கள் வரிசையில் வரமுடியாது. பகுத்தறிதல் உண்டாகி, பிறகு அது நடந்ததை நீங்கள் காண்பதுவும், சுகமடையும் படியாக கரங்கள் அவர்கள் மீது வைக்கப்பட, ஜனங்கள் போதிய விசுவாசத்துடன் கடந்து செல்வதும் கர்த்தர் செய்யக் காண்பது நமக்கு மகத்தான காட்சி அல்லவா? நாம் மிகவுமாக அமெரிக்கத் தன்மையை அடைந்துவிட்டதால், பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் பொழுதுபோக்கு (Entertain) காட்ட வேண்டுமா? இங்கே வாருங்கள், உங்களை நான் அறியேன். ஆனால் நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். அது சரியா? நீங்கள் என்னை அறிவீர்கள், ஆனால் உங்களை எனக்குத் தெரியாது. ஆனால் நம்மிருவரையும் தேவன் அறிவார். உம்முடைய பிரச்சனை என்ன என்பதை தேவன் எனக்குக் கூறுவார் என்றால் நான் அவருடைய தீர்க்கதரிசி என்று உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிப்பீர்களா? அது சரி. இருதயக்கோளாறு, அது முற்றிலும் சரி. உங்கள் முழு இருதயத்தோடும் இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் சுகமாவீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? இதற்காக நீங்கள் நீண்ட தூரத்திலிருந்து வந்துள்ளீர்கள், அப்படித்தானே? கலிபோர்னியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். அது சரி. நீங்கள் மனைவியை கூட்டி வந்திருக்கிறீர்கள் அல்லவா? அவளுக்கும் சுகம் தேவையாய் உள்ளது? அவர்களுக்கு அட்டை கிடைக்கவில்லை. ஆனால் அவர்களுடைய இடுப்பில் ஏதோ கோளாறு உள்ளது. அது விழுந்ததனால் ஏற்பட்டது. அது சரியா? இருவரும் சுகமாகப் போகிறீர்கள்; வீடு செல்லுங்கள். விசுவாசித்துக் கொண்டே செல்லுங்கள். 65இப்பொழுது, அது அதேபோன்று...? நீங்கள் விசுவாசிப்பீர்களானால், யாவும் வைகூடும். நீங்கள் விசுவாசிக்கிறீரா, சகோதரியே? உங்கள் மீது கரங்களை வைக்கிறேன், நீங்கள் சுகமடைவீர்கள் என்று விசுவாசிக்கிறீரா? அப்படியானால் வாருங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், இந்த பெண்ணிற்கு சுகம் உண்டாகட்டும். அது சரி. வாருங்கள் ஸ்திரீயே. இப்பொழுது, பாருங்கள்? இப்பொழுது, என்ன... அந்த மனிதன் சுகமானது போன்றே இந்த ஸ்திரீயும் சுகமடைந்தாள். நாம் ஏன் 'அந்த ஸ்திரீயை சுகப்படுத்தினதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று சொல்லக் கூடாது? பாருங்கள். 66இங்கே, இப்பொழுது, உங்களிடம் என்ன கோளாறு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும் என்று உங்களுக்குத் தெரியுமா?எனக்கு தெரிந்தவாறே உங்களுக்கும் அது தெரிந்திருக்கும். தேவனால் அதை எனக்கு கூறமுடியும் என்பது உங்களுக்கு தெரியும். இப்பொழுது, தேவனால் அதை எனக்கு கூற முடியும் என்பது உங்களுக்கு தெரியும். இப்பொழுது, நான் அதை உங்களுக்கு கூறினால் அது உங்களுக்கு உதவியாய் இருக்குமா? அது நரம்பு தளர்ச்சி, பலவீனம், அது முற்றிலும் உண்மை. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமடைந்து செல்லுங்கள். விசுவாசம் கொள்ளுங்கள். சகோதரியே உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், செல்லுங்கள் சுகமடையுங்கள். சகோதரியே உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, சென்று சுகமடையுங்கள். வாருங்கள் சகோதரியே, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே சென்று, சுகமடையுங்கள். இப்பொழுது, சரியாக தேவன் அப்படித்தான் செய்யும்படியாகக் கூறினார், அது சரிதானே? விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சென்று சுகமடையுங்கள் ஆமென். நீங்கள் இவளுக்காக விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே பிசாசானது இப்பிள்ளையை விட்டு நீங்கட்டும். ஆமென். இப்பொழுது சென்று சுகமடை. உங்கள் வயிற்று கோளாறு நீங்கி, ஆகாரம் உண்ண வேண்டுமா? சென்று உங்கள் ஆகாரத்தை உண்ணுங்கள். இயேசுவின் நாமத்தில் சுகமடையுங்கள். உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள்? 67பிடியுங்கள்... அந்த ஆறாவது புலனை அடையுங்கள், அந்த பழையதான ஐந்தை உங்கள் வழியிலிருந்து அகற்றிவிடுங்கள், விசுவாசியுங்கள். எப்படி இருக்கிறீர்கள். நான் ஆம் அல்லது இல்லை என்று உங்களுக்கு கூறினால், எப்படியாயினும் அதை விசுவாசிப்பீர்களா, அஹ்? எப்படியிருந்தாலும் நீங்கள் அதை விசுவாசிப்பீர்கள். அது சரி. முதுகு தண்டில், உங்கள் தோள்களின் மத்தியில் ஒரு சிறிய கட்டி உள்ளது, விசுவாசித்துக் கொண்டே சென்று சுகமடையுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசம் கொள்ளுங்கள். வாருங்கள் சகோதரனே. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசுவின் நாமத்தில் அவர் சுகமாகட்டும். வாருங்கள், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா சகோதரனே? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்கள் மீது என் கரங்களை வைக்கிறேன்; நீங்கள் சுகமடைவீர்கள். ஆமென். இப்பொழுது விசுவாசியுங்கள். ஐயா நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே சுகமாகுங்கள். ஆமென். நீங்கள் அதை விசுவாசித்தால் உங்களுக்கு இயேசு அதைச் செய்வார். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே சுகமடையுங்கள். சகோதரர்களே, அதுதான் வழி. அதுதான். அதைச் செய்வதற்குரிய வழி அதுதான். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, சென்று சுகமடையுங்கள். ஆமென். வாருங்கள், சகோதரியே. அதைப்போன்ற அற்புதங்களைச் செய்கின்ற பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கையில், நான் அவரால் அபிஷேகிக்கப்பட்டிருக்கிறேன் என்று நீங்கள் நிச்சயமாக விசுவாசிப்பீர்களா?அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே சென்று சுகமடையுங்கள். ஆமென். சகோதரனே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே சென்று சுகமடையுங்கள். 68“நீங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்தால் யாவும் கைகூடும்...” இவர்கள் அடுத்த வியாதியஸ்தரா? அது சரி. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீரா சகோதரியே? அதுதான். ஆமென். அவள் உண்மையாகவே அதைப் பெற்றுக்கொண்டாள். அவள் மீது ஒரு நிழல் இருந்ததை நான் கவனித்தேன், அது மறைந்தபோது, அதற்கு (அந்த நிழலிற்கு - தமிழாக்கியோன்) என்ன நேர்ந்தது என்று ஆச்சரியப்பட்டு திரும்பிப் பார்த்தேன், இப்பொழுது அவள் விசுவாசித்ததால் அது மறைந்து போயிற்று. பாருங்கள்? அதுதான். உங்களை நான் அறியேன். உங்களுக்கும் என்னைத் தெரியாது. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். ஆனால் தேவன் உங்களை அறிவார். என்னால் முடிந்தவரை உங்களுக்கு உதவ நான் இங்கிருக்கிறேன் என்பதையும் அவர் அறிவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒரு நிமிடம் பொறுங்கள், கூட்டத்தின் மத்தியிலே ஏதோ நிகழ்ந்துள்ளது. எங்கேயோ, எங்கேயோ. அதுதான்; அங்கே விசுவாசிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். நல்லது, உங்களுக்குள்ள பிரச்சனை உங்கள் முதுகு ஆகும். அது சரி. உங்களுக்கு முதுகில் பிரச்சனை உள்ளது. செல்வி. பின்ஹோபர் வீடு சென்று சுகமாயிருங்கள். 69உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசித்து வாருங்கள். ஐயா நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே சென்று சுகமடையுங்கள். வாருங்கள், இப்பொழுது, உங்களுக்குள்ள கோளாறு என்ன என்று நான் கூறுவேனானால், அல்லது கூறாவிட்டால், அல்லது என்னவாயிருந்தாலும் சரி, எப்படியாயினும் நீங்கள் விசுவாசிப்பீர்களா? அப்படியானால் உமக்குள்ள, பெண்களுக்குரிய கோளாறு உங்களை விட்டு நீங்கி போயிற்று. ஆம் எப்படியாயிருப்பினும், நான் அதைக் கூறிவிட்டேன். அதுசரி. தேவன் உங்கள் நரம்புத்தளர்ச்சியை சுகமாக்கப் போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? அது சரி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சென்று சுகமாயிருங்கள்; உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். வயிற்றுக் கோளாறிலிருந்து நீங்கள் விடுபட விரும்புகிறீர்களா? அதுசரி. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சென்று உங்கள் இரவு ஆகாரத்தை உண்டு சுகமாயிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அது சரி. சகோதரியே நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே சென்று சுகமடையுங்கள். அது சரி. இந்த சிறு பையன் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவான் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் பிள்ளைக்கு இதைச் செய்திருக்கிற பிசாசை நான் சபிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இவன் சுகமடைவானாக. ஆமென். இவனை கொண்டு செல்லுங்கள், சந்தேகிக்காதீர்கள். நீங்கள் விசுவாசித்தால் அவனுக்கு என்ன நேரிடுகிறது என்பதை கவனியுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே நீங்கள் சுகமடைவீர்கள். 70இங்கிருந்து சுகமாகுதல் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அது அங்கே பின்புறமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் பழுப்பு நிறத் தொப்பி அணிந்து மெலிந்து போய் காணப்படுகிற ஒரு சிறிய பெண்ணாகும். அவள் காச நோயால் (TB) அவதியுறுகிறாள். அது சரி. சகோதரியே உங்களை எனக்குத் தெரியாது, உங்களுக்கு... ஆம், என்னை உங்களுக்கு தெரிந்திருக்கத்தான் வேண்டும். போர்ட் வேய்னில், இண்டியானாவில் நடந்த என்னுடைய கூட்டங்களில் நீங்கள் ஒருமுறை சுகமானதை நான் காண்கிறேன். அல்லேலூயா! அதுதான். அந்த இடத்திலே (போர்ட்வேய்ன், இண்டியானா - தமிழாக்கியோன்) உமக்கு என்ன கோளாறு இருந்தது என்பதை தேவன் என்னிடம் கூறுவாறென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு கட்டி இருந்தது. தேவன் உங்களை அதிலிருந்து சுகப்படுத்தினார். கர்த்தர் உரைக்கிறதாவது. அல்லேலூயா! நீங்கள் விசுவாசிக்கும் படியாக நான் சவால் விடுகிறேன். அங்கே அநேகர் விசுவாசிக்கின்றனர். தேவனில் விசுவாசம் கொள்ளுங்கள். சகோதரியே நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசுவின் நாமத்திலே சென்று தேவனுடைய மகிமைக்காக சுகமடையுங்கள். சகோதரனே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சென்று சுகமடையுங்கள். சகோதரனே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சென்று சுகமடையுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, சகோதரியே? இயேசுவின் நாமத்தில் சென்று சுகமடையுங்கள். சகோதரனே நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசுவின் நாமத்தில் சென்று சுகமடையுங்கள். இந்த சிறு குழந்தைக்காக நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, பாருங்கள், இது பிறந்தபோது நேர்ந்த ஒன்று என்பது எனக்குத் தெரியும், அது அதனுடன் செய்வதற்கு ஒன்றும் இல்லை... பிசாசு எந்நேரத்திலும் எது செய்தாலும், தேவனால் அதை எடுத்துப் போட முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இந்த குழந்தைக்கு இதைச் செய்திருக்கிற பிசாசை நான் சபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த குழந்தை சுகமாகக் கடவது. ஆமென். 71சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சென்று சுகமடையுங்கள். சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சென்று சுகமாகுங்கள். சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசுவின் நாமத்திலே சென்று சுகமாகுங்கள். சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (இதுதான் கடைசி ஜெப வரிசையா?) அது சரி, ஒரு நிமிடம் என்னைப் பாருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு என்ன கோளாறு என்று தேவன் என்னிடம் கூறினால் நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? ஒரு காரியம், உங்கள் கண்கள் மோசமாகிக் கொண்டே போகிறது. அது சரி. ஆனால் முக்கியமானது அதுவல்ல. உமக்கு வயிற்றில் ஒரு கட்டி உள்ளது. நீங்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவர் அல்ல. இல்லினாயிற்கு திரும்பிச் சென்று சுகமாகுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். நீங்கள் விசுவாசிப்பீர்களானால் யாவும் கைக்கூடும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 72அங்கே பின்னாலே உட்கார்ந்திருக்கும் அந்த மனிதன் இருதயத்தில் துளை உள்ள ஒரு சிறு குழந்தையை கொண்டு வந்திருக்கிறார். டென்னஸ்ஸியிலுள்ள சட்டனூகா என்னும் இடத்தை சார்ந்தவர் நீங்கள். திரு. கிர்க்லைன், விசுவாசித்து வீடு செல்லுங்கள். அந்த குழந்தையின் இருதயம் சுகமாகும். இயேசு கிறிஸ்து அதை சுகமாக்குகிறார். அல்லேலூயா! அது தான் நம்முடைய தேவனின் வல்லமையாகும். தேவனில் விசுவாசம் கொள்ளுங்கள். டென்னஸியிலுள்ள மெம்பீஸ் என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு ஸ்திரீ தன் தொலைந்து போன மகளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவனில் விசுவாசம் கொள்ளுங்கள். நான் ஒரு ஸ்திரீயைத் தேடிக் கொண்டிருக்கிறேன், இக்கூட்டத்தில் அவளை என்னால் காண முடியவில்லை. ஆனால் இங்கு எங்கோ அவள் இருக்கின்றாள். அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். தேவனே, அவளை கண்டு பிடிக்க எனக்கு உதவி செய்யும். இருதயக் கோளாறும் சர்க்கரை வியாதியும் உள்ள, விசுவாசத்துடன் இருக்கும் யாரோ ஒருவர். அவர்களுடைய பெயர் திருமதி. வெல்ஸ் தேவனிடத்தில் விசுவாசம் கொள்ளுங்கள். யாரோ ஒருவர், என்னால்... (யாரோ ஒருவர், “அவள் இங்கிருக்கிறாள்'' என்று கூறுகின்றனர் -ஆசி) அது சரி, அது சரி, சகோதரியே உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்தது. உங்கள் குடும்பம் முழுவதுமாக இருதயக் கோளாறு உள்ளவர்களாய் இருக்கின்றது. உம்மிடம் ஜெப அட்டை இல்லை, அப்படித் தானே? ஏனெனில் நீங்கள்... இல்லை, ஏனெனில் எல்லா ஜெப அட்டைகளும் தீர்ந்து போனது. உங்கள் குடும்பம் முழுவதிற்குமே இருதயக் கோளாறு உள்ளது. இருதயக் கோளாறுள்ள ஒரு சகோதரன் உங்களுக்கு இருக்கிறார். அந்த சகோதரன் இங்கே இல்லை. அவர் பால்டி மோரில் உள்ள மேரிலாண்டில் வசிக்கின்றார். அவர் இரட்சிக்கப்படவேயில்லை, ஏனெனில் ஒரு கறுத்த நிழலால் அவர் மூடப்பட்டிருக்கிறார். ”அது கர்த்தர் உரைக்கிறதாவது“. 73உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? அந்த ஆறாவது புலன் உங்கள் பேரில் கிரியை செய்யப் போகிறதா?இங்கே ஒருவர் மேல் ஒருவர் கரங்களை வையுங்கள். ஓ தேவனே, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இந்நேரத்தில் பரிசுத்த ஆவியை அனுப்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தெய்வீக பிரசன்னத்தில் உள்ள ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு உங்களுடைய இரட்சகர் என்பதை இங்குள்ள எத்தனைப் பேர் அறிய விரும்புகிறீர்கள்? எழுந்து நில்லுங்கள். நீங்கள் அவருக்கு அருகில் இருக்கிறீர்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. அதுசரி. அற்புதமானது! 74எத்தனை பேருக்கு பரிசுத்த ஆவி தேவையாயிருக்கிறது? எழுந்து நில்லுங்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற விரும்புவோர் எழுந்து நிற்கவும், ஒவ்வொருவரும். நீங்கள் நிறையப் பேர் இருக்கிறீர்கள், இங்கே உங்களை நிற்க வைக்க முடியாது, இந்த அறைக்குள் வாருங்கள், இங்கே நாங்கள் உங்களை சந்திக்க ஏதுவாயிருக்கும். நீங்கள் இயேசுவின் நாமத்தில் உத்தமத்துடன் வருவீர்களானால் நீங்கள் உங்கள் எல்லா பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவீர்கள். இன்றிரவு அந்த அறைக்குள் செல்லுங்கள். இதுதான் சமயம். அறைக்கு செல்ல வேண்டிய வழியும் இதுவாகும். தேவனில் விசுவாசம் வைத்து, இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட விரும்புவோர் அந்த அறையை விட்டு வாருங்கள். நாங்கள் உங்களிடம் பேச ஏதுவாயிருக்கும். ஜெபர்சன்வில்லிலுள்ள என்னுடைய சபையைச் சேர்ந்த யாராவது ஒருவர் பரிசுத்த ஆவியை இன்னும் பெறாமல் இருந்தால்... சகோ. காலின்ஸ், இன்னும் மற்றோரும் இங்கு இருக்கின்ற முதற்கொண்டே அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கின்றனர். ஓ, அவர்கள் தேசத்தை கிழித்தெறிந்திருக்கின்றனர். வாருங்கள் அதைப் பெறுவதற்கு இது தான் சரியான தருணம். உள்ளே செல்லுங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும்வரை அதைவிட்டு வெளியே வராதிருங்கள். பாவிகளே, எல்லோரும் வாருங்கள். இங்கே உள் சென்று இரட்சிப்புக்காக தேவனை நோக்குங்கள். அதுதான் வழி. 75இங்கே தெய்வீக பிரசன்னத்தில் இருக்கின்ற வியாதியுள்ள, ஏதோ ஒரு கோளாறை உடைய ஒவ்வொருவரும், நான் உங்களுக்காக ஜெபிக்கையில், நீங்கள் எல்லோரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாக சவால் விடுகிறேன். நீங்கள் அதைச் செய்வீர்களா? அப்படி விசுவாசிப்பீர்கள் என்று எத்தனைப் பேர் வாக்கு கொடுப்பீர்கள்? ஆவிகளை பகுத்தறியத் தக்கதாக தேவன் எனக்கு வல்லமை அளிப்பாரானால்... நான் உங்களுக்கு கூறுகிறேன், என்னால் உங்களை சுகப்படுத்த இயலாது. நீங்கள் ஏற்கனவே சுகமாக்கப்பட்டீர்கள். இயேசு உங்களுக்காக மரித்த போதே உங்களை சுகமாக்கிவிட்டார். அந்த ஆறாவது புலன் உணர்வில்லாத நிலையில் இல்லாதிருக்கட்டும், அதை இப்பொழுது கிரியைக்கு விட்டு, அதை விசுவாசியுங்கள். இங்கே சக்கர நாற்காலியில் உள்ள, உங்களைக் குறித்து என்ன, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நம்முடைய கரங்களை தேவனிடத்தில் உயர்த்துவோம். 76ஓ தேவனாகிய கர்த்தாவே, இந்த செய்தியானது வீணாகாமல் இருக்கட்டும். இங்கே இன்றிரவு தேவனுடைய வல்லமை வீணாகாமல் இருக்கட்டும். ஆனால் பரலோக தேவனே உம்முடைய நியாயத் தீர்ப்பின் வல்லமையை கீழே அனுப்பி ஒவ்வொரு நபரையும் சுகப்படுத்தும். புற்றுநோய், இருதயக் கோளாறு உள்ளவர்கள், முடமானவர்கள், இரத்தப் புற்றுநோய், மற்றும் எவ்வித வியாதியஸ்தர்களாயினும் சரி அவர்கள் ஒவ்வொருவரையும் விட்டு பிசாசு நீங்குவதாக. வியாதியஸ்தரையும், பிணியாளிகளையும் சுகப்படுத்த பாடுகளுக்குள்ளான இயேசு கிறிஸ்து அனுப்பிய அந்த தூதனின் மூலம் எனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக் கொண்டு அதை நான் சவாலுக்கழைக்கிறேன். சாத்தானே அவர்களை விட்டு வெளியே வா. அவர்களை விட்டு வெளியே வர இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உனக்கு நான் கட்டளை இடுகிறேன். இப்பொழுது, கிறிஸ்துவை தங்களை சுகமாக்குபவர் என்று ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும்; உங்களுக்கு என்ன கோளாறு இருக்கின்றது என்பதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை. அது ஒரு வித்தியாசத்தையும் உண்டு பண்ணாது; நீங்கள் தேவனை விசுவாசித்தால், எழுந்து நின்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வழி. ஆமென்! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதுதான்! அது பரிபூரணமானது. சகோ. சல்லிவன் தேவன் உங்களுடையதை ஆசீர்வதிப்பாராக.